"ராஷ்டிரா" என்றால் என்ன தெரியுமா? வரலாறு தெரியாத ஆளுநர் ஆர்.என்.ரவி.. பொன்முடி சொன்ன விளக்கம்!
விழுப்புரம்: தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதற்கு இந்திய அரசியலமைப்பிலேயே தமிழ்நாடு என்றே உள்ளதாக அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிராவில் "ராஷ்டிரா" என்றால் நாடு என்பது பொருள் எனவும், வரலாறு தெரியாத ஆளுநர் இப்படியான கருத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று பேசிய கருத்துகள் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வேம்பி ஊராட்சிக்குட்பட்ட பூண்டி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா. புகழேந்தி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

இந்திய அரசியலமைப்பு
பின்னர் பணியின்போது உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாடு என்பது சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கூறப்படும் கருத்து. அது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவின் அரசியலமைப்பிலேயே தமிழ்நாடு என்றே உள்ளது.

யூனியன் ஆப் ஸ்டேட்
அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தின் போதே கூட்டாட்சியா? அல்லது ஒற்றை ஆட்சியா? எப்படி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற விவாதம் ஏற்பட்டபோது அம்பேத்கர் யூனியன் ஆப் ஸ்டேட் என்று கொண்டு வந்தார். அந்த அடிப்படையில் தான் யூனியன் ஆப் ஸ்டேட் என்பதை கூறுகிறோம். ஸ்டேட் என்றால் நாடு, யூனியன் என்றால் ஒன்றியம். அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு என்று சொல்கிறோம். அரசியலமைப்பின் படி செயல்படுகிற ஒரு முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் என்பதில் எந்த மாறுபட்ட கருத்துமில்லை.

மகா"ராஷ்டிரா" அர்த்தம்
ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை. அவர் பல்வேறு நிகழ்வுகளில் இது போன்று பேசி வருகிறார். மகாராஷ்டிராவில் 'ராஷ்டிரா' என்றால் 'நாடு' என்று அர்த்தம். ஏதோ ஒரு எண்ணத்திற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தேசிய கீதத்தில் திராவிடம்
'ஜனகனமன' என்ற தேசிய கீதத்திலேயே திராவிடம்' என்ற சொல் வந்துள்ளது. அந்த அடிப்படையில்தான் தமிழக முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். ஆளுநரை வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால் தமிழக அரசு என்ன செய்கிறதோ அதை நியமன பதவியிலுள்ள ஆளுநர் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications