Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோர்ட்டில் ஆஜரான அமைச்சர் பொன்முடி.. மகனை காணோமே.. செம்மண் குவாரி வழக்கில் விசாரணை பரபர!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி இன்று ஆஜராகியுள்ளார். செம்மண் குவாரி வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளதால் அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின்போது, உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாகக் கனிமவளத் துறைக்கும் அமைச்சராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு 28 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Sand quarry scam case against minister ponmudi hearing today

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி, திமுக நிா்வாகிகள் கோதகுமாா், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 போ் மீது கடந்த 2012ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சாட்சிகளின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்றது, அப்போது சதானந்தன், கோத குமார், ஜெயச்சந்திரன், கோபி நாத் ஆகிய 4 பேர் ஆஜராகினர்.

அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி எம்.பி, ராஜ மகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராகாததற்கான காரணம் குறித்து தி.மு.க வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். பின்னர் ஆகஸ்ட் 16ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில், அரசுத் தரப்பு சாட்சியான குமரபாலன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. முதல் சாட்சியும், வழக்கின் புகார்தாரரும், முன்னாள் தாசில்தாருமான குமாரபாலன், உடல்நிலை சரியில்லாததால், சக்கர நாற்காலியில் வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் அவர் நீதிபதி முன்னிலையில் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு 17ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி, ராஜ மகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. எனவே ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

ஏற்கெனவே, சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் நீதிமன்றம் விடுவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை சரியாக நடத்தப்படவில்லை எனக் கூறி தாமாக முன்வந்து மறுவிசாரணையை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அண்மையில் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்ததும் கவனிக்கத்தக்கது.

செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜராகியுள்ளார். அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கவுதமசிகாமணி இன்று ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததற்கான காரணத்தை அவரது வழக்கறிஞர்கள் மனுவாக தாக்கல் செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+