உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதல்- 3 பேர் பலி
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வசந்தகுமார் (25), பழனிமலை மனைவி நாவலேரி (45), மதிவாணன் மனைவி ரேவதி (32), நாகராஜ் (45), மகேஸ்வரி (30) ஆவர்.

கட்டடத் தொழிலாளர்களான இவர்கள் நேற்று வேலைக்காக செங்குறிச்சிக்கு சென்றனர். பின்னர் அங்கு வேலை முடிந்ததும் கலவை எந்திரம் இணைக்கப்பட்ட டிராக்டரில் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
டிராக்டரை திருநாவலூரை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் ஓட்டினார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் ஆற்று பாலத்தில் அந்த டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் டிராக்டரும் கலவை இயந்திரமும் முற்றிலும் நசுங்கி போனது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த வசந்தகுமார், நாவலேரி ஆகிய இருவரும் உடல் நசுங்கி பலியாகிவிட்டனர். மேலும் டிராக்டரில் வந்த வெற்றிவேல், நாகராஜ், ரேவதி, மகேஸ்வரி, மற்றும் பேருந்து பயணம் செய்த சுப்பிரமணி (67), கார்த்தி மணி (65), முத்து (45) ஆகிய 7 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டனர். அதில் விபத்தில் காயமடைந்த ரேவதி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த விபத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து மாற்று பாதையில் வாகனங்களை போலீஸார் அனுப்பி வைத்தனர்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications