விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை மோதல்.. வேட்பு மனு தாக்கல் நிறைவு.. 64 பேர் மனு தாக்கல்!
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 64 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். புகழேந்தி மறைவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தேமுதிகவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விக்கரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி விக்கரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 64 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகளின் 3 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது. மேலும், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இன்று மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வரும் ஜூன் 24 ஆம் தேதி இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வரும் 26-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள். மேலும், இந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications