தண்ணீர் கேட்ட 2 வயது குழந்தை.. வீட்டுக்குள் சென்ற அம்மா.. சில நிமிடத்தில் நேர்ந்த விபரீதம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே நீச்சல் குளத்தில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    நீச்சல் குளத்தில் விழுந்து பெண் குழந்தை பலி...போலீசார் தீவிர விசாரணை!

    விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்து பெரியமுதலியார் சாவடியை சேர்ந்தவர் சத்திகுமார். இவரது மனைவி மனோன்மணி. இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு வயதில் வித்தியஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது.

    சம்பவத்தன்று மதியம் மனோன்மணி தனது 2 வயது பெண் குழந்தை வித்தியஸ்ரீக்கு வீட்டின் வெளியே உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது குழந்தை தண்ணீர் கேட்கவே குழந்தையை வாசலில் இறக்கிவிட்டு வீட்டுக்குள் தண்ணீர் எடுக்க மனோன்மணி சென்று திரும்பி வந்து பார்க்கையில் குழந்தை வீட்டின் வாசலில் இல்லை. அக்கம் பக்கம் உள்ள வீட்டில் சென்று பார்த்தார் மனோன்மணி வித்திய ஸ்ரீயை காணததால் அதிர்ச்சி அடைந்தார்.

    மிதந்த குழந்தை

    மிதந்த குழந்தை

    வீட்டின் எதிரே உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸ் உள்ளே சென்று தேடிப் பார்த்தபோது அங்கு உள்ள சுமார் 5 அடி ஆழம் உள்ள நீச்சல் குளத்தில் தனது குழந்தை மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மனோன்மணி நீச்சல் குளத்தில் மிதந்த தனது குழந்தையை தூக்கினார். மூச்சு பேச்சு இல்லாத நிலையில் இருந்த குழந்தையை பார்த்து கூச்சலிட்டவுடன் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது குழந்தை இறந்து போயிருந்தது.

    நீச்சல் குளம்

    நீச்சல் குளம்

    குழந்தை நீச்சல் குளம் தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மனோன்மணி கொடுத்த புகாரின் பேரில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    உடைப்பு ஏற்பட்டது

    உடைப்பு ஏற்பட்டது

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் பார்சல் லாரி டிரைவரின் தூக்க கலக்கத்தால் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் டீசல் டேங்கில் உடைப்பு ஏற்பட்டதால் டீசல் முழுவதும் வெளியேறியது. இதனை அப்பகுதி மக்கள் பாத்திரங்களில் பிடித்துச் சென்றனர்.

    டிரைவர்

    டிரைவர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, பாரநாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வக்கனி. இவர் மதுரையில் உள்ள தனியார் பார்சல் ஏஜென்சியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மதுரையிலிருந்து சென்னைக்கு லாரியில் பார்சல்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.

    பார்சல் லாரி

    பார்சல் லாரி

    லாரி திண்டிவனம் அடுத்த விளங்கம்பாடி சர்வீஸ் சாலை அருகே இன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் தூக்கக்கலக்கத்தில் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. சர்வீஸ் சாலை துவக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பாலான பாரி காட்டில் பார்சல் லாரி எனது சொருகியபடி நின்றது.

    பாத்திரதில் பிடித்த மக்கள்

    பாத்திரதில் பிடித்த மக்கள்

    இந்த விபத்தில் லாரியின் டீசல் டேங்கில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் டீசல் முழுவதும் சாலையில் வழிந்தோடியது. உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாலி மற்றும் பாத்திரங்கள் மூலம் டீசலை பிடித்துச் சென்றனர். அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+