தவெக மாநாட்டுக்கு புது சிக்கல்? பந்தகாலுக்கு பிறகு வரும் பிரச்சனை.. என்ன செய்யப்போகிறார் விஜய்!
விழுப்புரம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் 27 ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இன்று அதிகாலையில் பூமி பூஜையுடன் மாநாட்டுக்கான வேலைகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ள நிலையில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது வாகன நிறுத்தத்திற்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் விஜய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு என்பது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகிறார். அதன்படி இன்று மாநாட்டுக்கான பந்தகால் மற்றும் பூமி பூஜை நடந்தது.
அதாவது இன்று அதிகாலை 4.30 மணிக்கு வி.சாலையில் மாநாடு நடக்கும் இடத்தில் பூஜைகளுடன் பந்தகால் நடப்பட்டது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த விழா நடந்தது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது மாநாட்டுக்கு பல்வேறு அறிவுரைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். மாநாட்டுக்கு அனுமதி வழங்க போலீசார் 21 கேள்விகளை கேட்டு இருந்தனர். போலீசார் கேட்ட 21 கேள்விகள் தண்ணீர் வசதி, உணவு வசதி, பார்க்கிங் வசதி, மாநாட்டுக்கு எத்தனை பேர் வருவார்கள்? என்பது பற்றி கேட்கப்பட்டு இருந்தது. இந்த கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலளித்த பின்னரே போலீஸ் தரப்பில் அனுமதி என்பது வழங்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் பந்தகால் நட்ட பிறகு புதிய சிக்கல் என்பது ஏற்பட்டுள்ளது. அதாவது விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டுக்கு 150க்கும் அதிகமான ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் வரை வந்து செல்வார்கள் என்று போலீசார் கணித்துள்ளனர். தற்போது பார்க்கிங்கிற்கு 44 ஏக்கர் நிலம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 3 லட்சம் தொண்டர்கள் வரும்போது அந்த இடம் என்பது வாகன நிறுத்தத்திற்கு போதுமானதாக இருக்காது என போலீசார் கருதுகின்றனர்.
விஜய் கட்சிக்கு தனி சின்னம் ரெடி? என்ன தெரியுமா? தவெக பக்கம் மெல்ல நகரும் காங்கிரஸ்!
இதையடுத்து விழுப்புரம் எஸ்பி தீபக் சிவாச் இன்று நேரில் விஜய் மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டுள்ளார். போலீசாரின் ஆய்வை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய அறிவுரை விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பார்க்கிங்கிற்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது மாநாடு நடக்கும் இடம் போதுமானதாக இல்லாத பட்சத்தில் அருகே உள்ள மற்றவர்களிடம் வாடகைக்கு நிலத்தை வாங்கி பார்க்கிங் வசதிக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் உத்தரவிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரம்ம முகூர்த்தத்தில் பூமி பூஜை.. அதிகாலையில் மாலையும் கழுத்துமாக ஆனந்த்! தவெக மாநாடு ஏற்பாடு ஜோர்!
போலீஸ் இந்த உத்தரவை பிறப்பிக்கும் பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சிக்கல் என்பது ஏற்படும். ஏனென்றால் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு மதுரை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் இடம் தேடியும் கிடைக்காமல் விக்கிரவாண்டியில் கடைசியாக இடம் கிடைத்தது. தற்போதும் கூடுதல் இடத்தை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்று போலீஸ் உத்தரவிடும்பட்சத்தில் அது தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications