பட்டாசு ஆலை வெடி விபத்து.. பெண் உட்பட இருவர் பலி.. 4 பேர் படுகாயம்.. சாத்தூரில் சோகம்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணிஞ்சம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வந்தார். இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக பட்டாசு ஆலையில் பணியாற்றிய 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக வெடிவிபத்தில் படுகாயமடைந்த மாரீஸ்வரன், கருப்பசாமி, மாரிமுத்து, ராஜ்குமார் ஆகியோருக்கு 100 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடி விபத்து காரணமாக ஆலையின் 8 அறைகள் வெடித்து தரைமட்டமாகியுள்ளன. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் 2 வாகனங்களில் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல் சிவகாசி அருகே தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் ஆலையில் இருந்த இரு அறைகளும் தரைமட்டமாகியுள்ளன. ஒரே நாளில் விருதுநகர் மாவட்டத்தின் இரு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications