விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜபாளையம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கா? நடிகை கவுதமிக்கா? அதிமுக- பாஜக மல்லுக்கட்டு பிரசாரம்

Google Oneindia Tamil News

ராஜபாளையம்: சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவதற்காக அங்கேயே முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார் நடிகை கவுதமி. அதேநேரத்தில் ராஜபாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக வேட்பாளராக போட்டியிடுவார் என்பதற்காக இரட்டை இலை சின்னங்களை வரைந்து பிரசாரம் செய்கின்றனர் அதிமுகவினர்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என அறிவிக்கப்படவில்லை.

பாஜக ஆளும் உபி, பீகாரில்தான் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை... பிரதமர் மோடிக்கு மமதா பதிலடி பாஜக ஆளும் உபி, பீகாரில்தான் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை... பிரதமர் மோடிக்கு மமதா பதிலடி

பாஜக பிரமுகர்கள்

பாஜக பிரமுகர்கள்

அதேநேரத்தில் பாஜக பிரமுகர்கள் சில தொகுதிகளை குறிவைத்து படுதீவிரமாக பிரசாரம் செய்கின்றனர். பாஜக மேலிட நிர்வாகிகளும் அந்த தொகுதிகளுக்கு போய் இவர்தான் வேட்பாளர்.. இவருக்கே ஓட்டுப் போடுங்கள் என்கின்றனர்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

அதிமுகவிடம் இருந்து தன்னிச்சையாகவே தொகுதிகளை வசப்படுத்திக் கொண்டு பாஜக பிரசாரம் செய்வது பல இடங்களில் அந்த கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

நடிகை கவுதமி

நடிகை கவுதமி

ஆனால் பாஜகவில் சேர்ந்த நடிகை கவுதமி அங்கேயே முகாமிட்டு தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். இதனால் கடுப்பாகிப் போன அதிமுக தொண்டர்கள், ராஜபாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் இரட்டை இலை சின்னத்தை சுவர்களில் வரைந்து வருகின்றனர். மேலும் ராஜேந்திர பாலாஜிக்காக பிரசாரமும் செய்கின்றனர்.

மல்லுக்கட்டும் அதிமுக- பாஜக

மல்லுக்கட்டும் அதிமுக- பாஜக

ஒருபக்கம் பாஜக பிரசாரம் செய்கிறது. இன்னொரு பக்கம் அதிமுகவினரும் பிரசாரம் செய்கின்றனர். இதனால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இதேநிலை நீடித்தால் ஒரே கூட்டணியில் இருக்கும் அதிமுக- பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் நிலைதான் உருவாகும் என கூறப்படுகிறது.

English summary
ADMK and BJP is fighting for the Rajapalayam Constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X