டிராக்டர் டிரைலர் திருட்டு.. பாஜக மாவட்ட நிர்வாகி காவல் துறையினரால் கைது.. பரபரப்பு!
விருதுநகர்: பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் மாவட்டச் செயலாளர் கண்ணன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருப்பாக்கடல் என்ற குளத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22ம் தேதி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது கல் பதிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது.

இதனால் டிராக்டர் மற்றும் டிரைலரை அதே இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அடுத்த நாள் காலை வந்து பார்த்த போது, டிரைலர் காணாமல் போனது தெரிய வந்தது. இதன்பின்னர் டிராக்டரின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், திருட்டு சம்பவத்தில் கடம்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அவரது கருப்பசாமிக்கு திருட்டில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கண்ணன் என்பவர் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து இவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் மாவட்டச் செயலாளர் திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications