மண்டைக்கேறிய கஞ்சா போதை! மருத்துவமனைக்குள் நிர்வாணமாய் புகுந்த சைக்கோ! செவிலியருக்கு நேர்ந்த கொடூரம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிர்வாணமாக உலா வந்த இளைஞர் செவிலியர் உடையை அணிந்ததோடு, செவிலியரை பலவந்தப்படுத்தி முகத்தில் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதியுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 மருத்துவர்கள் 5 செவிலியர்கள் மற்றும் 4 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது.

கஞ்சா இளைஞர்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு ஆளில்லாத நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த இளைஞர் ஒருவர் அங்கு உள்ள மருந்து மாத்திரைகள் அனைத்தையும் கீழே தள்ளிவிட்டுள்ளார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் தனது உடைகள் அனைத்தையும் கழட்டி நிர்வாணமாக அங்கேயே சுற்றி வந்துள்ளார்.

கடித்து வைத்து தாக்குதல்
அப்போது தங்கும் விடுதியில் இருந்து ஒரு செவிலியர் வெளியே வருவதைக் கண்ட அந்த இளைஞர் அந்த செவிலியர் மீது பாய்ந்து பலவந்தமாக அந்த செவிலியர் முகத்தில் அந்த மர்ம நபர் கடித்து குதறி உள்ளார். இதனால் அலறித் துடித்த செவிலியரின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த இளைஞர் விடுதிக்குள் சென்று செவிலியரின் உடையை எடுத்து மாட்டிக்கொண்டு அங்கேயே அமர்ந்துள்ளார்.

போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அந்த இளைஞர் பாளையம்பட்டி சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

செவிலியருக்கு சிகிச்சை
காயம்பட்ட அந்த செவிலியர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்து செவிலியரை இளைஞர் ஒருவர் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கஞ்சா போதையில் அந்த இளைஞர் அத்துமீறியிருக்கலாம் எனவும், மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் காவலாளிகளை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications