விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விட மாட்டேன்! ஆளுநரை வைத்து டெல்லி போட்ட "டபுள் பிளான்".. மேடையிலேயே புட்டு புட்டு வைத்த ஸ்டாலின்

Google Oneindia Tamil News

விருதுநகர்: திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆளுநர் பதவியை கடுமையாக விமர்சித்து பேசினார். ஆளுநர்களை நேரடியாக அட்டாக் செய்து முதல்வர் விமர்சனம் வைத்து இருந்தார்.

விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூரில் நேற்று திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு நபர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம் போல இந்த கூட்டம் நடைபெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40க்கு 40 இடங்களையும் வெல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பேசினார்.

'40க்கு 40’.. இதான் ஆரம்பம்.. இனி தமிழ்நாட்டுல எப்பவுமே திமுக ஆட்சி தான்.. ஸ்டாலின் பரபர பேச்சு! '40க்கு 40’.. இதான் ஆரம்பம்.. இனி தமிழ்நாட்டுல எப்பவுமே திமுக ஆட்சி தான்.. ஸ்டாலின் பரபர பேச்சு!

ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் பேச்சு

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விருதுநகர் மாவட்டம் திமுகவின் கோட்டை. தமிழ்நாட்டை எல்லா வளமும் கொண்ட மாநிலமாக மாற்றி வருகிறோம். சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை விருதுநகர். இந்த கூட்டத்தை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து உள்ளனர். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் ஆகியோருக்கு பாராட்டுகள் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

 திராவிட மாடல்

திராவிட மாடல்

திராவிட மாடல் கொள்கையோடு நாம் ஆட்சி செய்து வருகிறோம். இந்த மாநிலத்திற்கு மட்டுமல்ல, மொத்த தேசத்திற்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமை மீதம் இருக்கிறது. கூட்டாச்சியை, மாநில சுயாட்சியை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, மொழி உரிமையை, சமூக நீதியை இந்தியா முழுமைக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும். மாநிலங்கள் வலிமையாக இருக்க வேண்டும். மாநிலங்கள் வலிமையாக இருப்பதுதான் கூட்டாச்சிக்கு அடிப்படை.

தன்னிறைவு

தன்னிறைவு

தமிழ்நாடு மட்டுமல்ல எல்லா மாநிலங்களும் தன்னிறைவு பெற்று இருக்க வேண்டும். இந்தியாவின் எல்லா மாநிலங்களும் வலிமையாக, வளமாக இருக்க வேண்டும். நாம் வலிமையாக, வளமாக இருப்பதால்தான் மக்களுக்கு நன்மைகளை செய்ய முடிகிறது. மக்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு செல்ல முடிகிறது. ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதிலும், ஒற்றை திட்டங்களை கொண்டு வருவதிலும் ஒன்றிய அரசு முனைப்பு காட்டுகிறது.

மாநில உரிமை

மாநில உரிமை

இது மாநில உரிமைகளை பாதிக்கும். ஜிஎஸ்டி, நீட், புதிய கல்விக்கொள்கை எல்லாம் மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ளது. ஒன்றிய அரசின் மூலமாக மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வர பார்க்கிறார்கள். ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த பார்க்கிறார்கள். இரண்டு ஆட்சி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க மாட்டோம். இவற்றை தடுக்க திமுக கூட்டணி வலிமையாக போராடும். இவற்றை தடுக்க, தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 40 உறுப்பினர்கள் தேர்வாக வேண்டும். 40க்கு 40 என்ற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

English summary
Tamil Nadu Chief Minister Stalin criticized the Governor's post yesterday at the DMK's Mupperum Vizha. The chief minister was criticizing the governors by directly attacking them. DMK's triennial function was held at pattamputhur in Virudhunagar district yesterday. DMK President MK Stalin gave awards to various people in this function. The meeting was held as a preview for the 2024 Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X