சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி! தலா ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து நிகழ்ந்ததில் 6 பேர் பலியாகிவிட்ட சோக சம்பவம் நடந்தேறியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அப்பைநாயக்கன்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்குள்ள 4 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 4 அறைகளும் தரைமட்டமாகிவிட்டன. இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் பலியாகிவிட்டனர். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்பு படையினர் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவர்களை தேடி வருகிறார்கள்.
வேதி பொருட்கள் கலவையின் போது விபத்து நேர்ந்ததாகவும் விசாரணைக்கு பிறகே முழு தகவலும் தெரியவரும் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் எஸ்.பி. அரவிந்தன் ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முகமது சுதீனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications