சார்.. நானும் நடந்து தான் பள்ளிக்கு வரேன்.. பஸ் வசதி கேட்ட மாணவனை நெகிழ வைத்த தங்கம் தென்னரசு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் புதிய ஆய்வக கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அதன்பிறகு மாணவர்களிடம் கலந்துரையாடிபோது மாணவர் ஒருவர், ‛‛சார்.. நான் பள்ளிக்கு நடந்து தான் வருகிறேன். எங்களுக்கு பஸ் வசதி செய்து தாருங்கள்'' என்று கூறியதை கேட்டதும் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்த செயல் நெகிழ வைத்தது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பி.புதுப்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் புதிதாக ஆய்வக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை இன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாட்டினார்.

அதன்பிறகு அவர் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்தார். வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் படிப்பு பற்றி விசாரித்தார். மேலும் பல மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
மாணவர்களிடம் அவர்களின் பெயர், ஊர், வகுப்பு உள்பட பல விஷயங்களை கேட்டறிந்தார். பள்ளிக்கு எப்படி வந்து சொல்கிறீர்கள்? என்று கேட்டு தெரிந்து கொண்டார். அப்போது ஆத்திகுளத்தைச் சேர்ந்த சக்தி காளியம்மன் என்ற மாணவியிடம் பள்ளிக்கு எப்படி வருகிறீர்கள்? என்று கேள்வி கேட்டார். அதற்கு மாணவி, ‛‛ஆத்திக்குளத்தில் இருந்து வருகிறேன். பஸ் வரவில்லை. நடந்து தான் வருகிறேன்'' என்று பதிலளித்தார்.

அப்போது அருகே நின்ற மாணவன் அன்புக்கரசு, ‛‛நானும் ஆத்திகுளத்தில் இருந்து நடந்து தான் சார் பள்ளிக்கு வரேன். பஸ் வரவில்லை'' என்று கூறினார். இதை கேட்டதும் திரும்பிய தங்கம் தென்னரசு, ‛‛அதை தான் டா அந்த பாப்பாவிடம் கேட்டேன். உனக்கும் பஸ் வேணுமா?'' என்று மாணவனை அரவணைத்து கேட்டார். அதன்பிறகு அந்த மாணவனின் தோளில் கையை போட்டு பெயரை கேட்டார். அதற்கு மாணவன், ‛‛அன்புக்கரசு'' என்று கூறினார்.
அதை கேட்டதும் தங்கம் தென்னரசு, 'உன்னுடைய அன்புக்கு கட்டுப்பட்டு உங்க ஊருக்கு பஸ் விடுகிறேன். முதல் பஸ் விட்டதும் உன்னை தான் முதலில் ஏற்றி விடுவோம்' என்று கலகலப்பாக பேசினார். அதன்பிறகு சிறிது தூரம் மாணவனின் தோளில் கை போட்டபடி நடந்து சென்று மற்றவர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது மாணவி ஒருவர் கை கட்டியபடி பதிலளித்தார். அதனை பார்த்த தங்கம் தென்னரசு, மாணவி கைகட்டி நிற்க வேண்டாம் என்று கூறினார். அதன்பிறகு மாணவி எதார்த்தமாக நின்று பதிலளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications