மோடி சர்வ வல்லமையோடு இருக்கிறார்... திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல - அமைச்சர் ராமச்சந்திரன்
விருதுநகர்: மோடி சர்வ வல்லமையோடு இருப்பதாக சாத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12 வது மாநில மாநாட்டில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில மாநாடு மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது.
இன்று தொடங்கிய மாநில மாநாட்டில் கருத்தரங்கம், சொற்பொழிவு, புத்தககண்காட்சி, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள்
இம்மாநாட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், தமிழ்நாடு சிறுபான்மையினர் வாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A.R.ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புத்தக கண்காட்சி
இந்த மாநாட்டு வளாகத்தில் மறைந்த கலைஞர்களின் புகைப்பட திறப்பு நிகழ்ச்சியும், வளாகத்தில் பல்வேறு வகையான புத்தகங்களின் கண்காட்சியும், நாணய கண்காட்சியும், ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. மேலும் இந்த மாநாடு விழாவில் குழந்தைகளின் சிலம்பாட்டம், பறை இசை கலைஞர்களின் பறையாட்டம், போன்றவைகள் நடைபெற்றன.

அமைச்சர் பேச்சு
பின்னர் இந்த மாநில மாநாட்டில் பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், "பிரதமராக யார் வரக்கூடாது என்பதில் நாம் அனைவரும் இணைந்து இருந்தால்தான் மோடியை வீழ்த்த முடியும். மோடி சர்வ வல்லமையோடு இருக்கிறார். தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு என்று ஒரு கொள்கை உண்டு. ஆனால் பாஜகவுக்கு கொள்கை எதுவும் கிடையாது அவர்களின் ஒரே கொள்கை இந்த நாட்டை பிரித்தாள்வது மட்டுமே.

மு.க.ஸ்டாலின்
ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அப்படி கிடையாது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். திமுக இந்துக்களுக்கு எதிரானது அல்ல. தமிழகத்தில் எல்லா வகையிலும் நல்ல ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எங்களுடைய ஆட்சியில் எல்லா கூட்டணி கட்சிகளையும், ஆதரிக்கிறோம். அவர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்." என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications