2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு.. தாய் தற்கொலை.. துடிதுடித்துப்போன விருதுநகர்.. என்ன காரணம்?
விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கண்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார்(31). இவரது மனைவி லட்சுமி பிரியா. லட்சுமி பிரியா கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர். இருவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு தர்ஷினி (9) என்ற பெண் குழந்தையும், சிவ சண்முகவேல் (5) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். சிவகுமார் வச்சக்காரப்பட்டியில் உள்ள தனியார் பால்பண்ணையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

குடும்ப தகராறு
சிவகுமார் வேறு ஒரு பெண்ணுடனும், லட்சுமி பிரியா வேறு ஒருவருடன் அடிக்கடி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலையிலும் வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே சண்டை நடந்து உள்ளது. இதனால் விரக்தி அடைந்த லட்சுமிபிரியா தன்னுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றுள்ளார்.

2 குழந்தைகளுடன் தற்கொலை
தொடர்ந்து தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் எறும்பு மருந்தை கொடுத்த லட்சுமி பிரியா அவர்களை கிணற்றில் தள்ளி விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரம் ஆகியும் மனைவியும், குழந்தைகளும் வீடு திரும்பாதது கண்டு சிவகுமார் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் அவர்களை தீவிரமாக தேடினார்கள்.

அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது கிணற்றில் மனைவியும், குழந்தைகளும் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வச்சக்காரப்பட்டி போலீசாரும் தீயணைப்பு துறையினரும் லட்சுமி பிரியா மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களையும் கிணற்றில் இருந்து மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை
லட்சுமி பிரியா குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறிதது வசகரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை எற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
