தோல்வி பயத்தில் நயினார்.. நெல்லையில் இருந்து சாத்தூர் மாறியதன் பின்னணி.. உதயநிதி ‘அட்டாக்'
விருதுநகர்: ''திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டால் எங்கே டெபாசிட் கூட வாங்கமாட்டோமோ என்ற பயத்தில் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஆனால் சாத்தூர் மக்களாகிய நீங்கள் அதே ரிசல்ட்டை நயினார் நாகேந்திரனுக்கு வழங்க வேண்டும். சாத்தூரில் அவரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். அவர் தோல்வி பயத்தில் திருநெல்வேலி தொகுதியில் இருந்து சாத்தூர் தொகுதிக்கு மாறி வந்துள்ளார்'' என்று சாத்தூர் திமுக வேட்பாளர் கடற்கரை ராஜை ஆதரித்து பிரசாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டசபை தொகுதி இந்த முறை நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது தான்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் வென்ற நயினார் நாகேந்திரன் இந்த முறை திமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக சாத்தூரில் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
நயினார் நாகேந்திரனை எதிர்த்து திமுகவில் கடற்கரை ராஜ் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளடுள்ளார். இவர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் ஆதரவாளர் ஆவார். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் சாத்தூரில் போட்டியிட்டு அதிமுகவின் ஆர்பி உதயக்குமாரிடம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் அவருக்கு தற்போது திமுக சீட் வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் திமுக வேட்பாளர் கடற்கரை ராஜை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது;
தோல்வி பயத்தில் நயினார்
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டால் எங்கே டெபாசிட் கூட வாங்கமாட்டோமோ என்ற பயத்தில் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஆனால் சாத்தூர் மக்களாகிய நீங்கள் அதே ரிசல்ட்டை நயினார் நாகேந்திரனுக்கு வழங்க வேண்டும். சாத்தூரில் அவரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். அவர் தோல்வி பயத்தில் திருநெல்வேலி தொகுதியில் இருந்து சாத்தூர் தொகுதிக்கு மாறி வந்துள்ளார்.
திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்
நம்முடைய வேட்பாளர் உங்களுடன் தொடர்பில் இருக்கிறார். தேர்தல் வரும்போது தான் அவரை சந்திக்க முடியும் என்பது இல்லை. அவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பணியாற்றி அனுபவம் கொண்டவர். அவரது பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் திமுக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. இதனால் அவரை நீங்கள் (மக்கள்) வெற்றி பெற வைக்க வேண்டும்.
சாத்தூர் தொகுதியின் பின்னணி
வரும் சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாஜகவில் நயினார் நாகேந்திரன், திமுகவில் கடற்கரை ராஜ், நாம் தமிழர் சார்பில் ஆனந்த ராஜ் என்பவரும், தவெகவில் அஜித் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். இதனால் போட்டி கடுமையாக உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதி திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுகவிற்கு வழங்கப்பட்டது. மதிமுக சார்பில் போட்டியிட்ட ஏஆர்ஆர் ரகுராமன் 74,174 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றிருந்தார்.
இவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுகவின் ஆர்கே ரவிச்சந்திரன் 62,995 வாக்குகள் வாங்கியிருந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் எம்எஸ்ஆர் ராஜவர்மன் போட்டியிட்டு 32,916 ஓட்டுகள் வாங்கியிருந்தார். அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரித்ததால் மதிமுக வேட்பாளர் ரகுராமன் 11,179 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் தற்போது அதிமுக கூட்டணியில் அமமுக உள்ளது. அதேபோல் நயினார் நாகேந்திரன் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு 27 சதவீத வாக்கு உள்ளது. இதனால் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இந்த தொகுதியில் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications