ஒரு பக்கம் கொரோனா.. மறுபுறம் விருதுநகரில் புகுந்த ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல்.. எந்தளவுக்கு ஆபத்து
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் வகை பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு நகராட்சி நிர்வாகம் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
கொரோனா வேக்சின் பணிகள் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு இத்தனை காலம் கட்டுக்குள் இருந்தது. நாடு முழுக்க இப்படிக் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.

புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பு இந்தியாவில் பரவி வரும் நிலையில், கடந்த சில காலமாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் கூட இதே நிலைதான்.

ஒரு பக்கம் கொரோனா: நேற்று மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் 300 தாண்டிவிட்டது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 1500 தாண்டிவிட்டது. இதன் காரணமாகத் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் கட்டுக்குள் இருப்பதாகவே சுகாதார அமைச்ச மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கொரோனா ஒரு பக்கம் பரவி வரும் நிலையில், மற்றொரு மோசமான வைரஸ் பாதிப்பும் இப்போது பரவ தொடங்கியுள்ளது. இது இப்போது விருதுநகர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அங்கே கடந்த சில மாதம் திடீரென சில பன்றிகள் உயிரிழந்தன. ஒரே இடத்தில் வாழ்ந்த அதிகப்படியான பன்றிகள் உயிரிழந்ததால் அங்கே நகராட்சி ஊழியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல்: இதையடுத்து அங்கே உயிரிழந்து கிடந்த பன்றிகளின் உடல்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, சென்னை மாதவரம் ஆய்வுக் கூடத்திற்கும், போபால் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டன. அதில் தான் உயிரிழந்த அனைத்து பன்றிகளுக்கும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் இருந்து தெரிய வந்தது. இதையடுத்து உஷாரான நகராட்சி அதிகாரிகள், அங்கிருக்கும் மற்ற பன்றிகளுக்கும் இது பரவியிருக்குமோ என்று அஞ்சி ஆய்வு செய்தனர்.
அப்போது சாத்தூர் அமீர் பாளையம் பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த 63 பன்றிகளுக்கும் ஆப்பிரிக்கன் வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்தது. ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க 63 பன்றிகளையும் அழிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்றைய தினம் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் உறுதியான பன்றிகளுக்கு விஷ ஊசி போட்டு அழித்தனர்.

நடவடிக்கை: இந்த ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் வேறு இடங்களுக்குப் பரவாமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பன்றி வளர்ப்போர் தங்கள் பன்றிகள் எதாவது திடீரென உயிரிழந்தால் உடனடியாக தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் என்பது மிகவும் வேகமாகப் பரவும் ஒரு கொடிய வைரஸ் நோயாகும், இது அனைத்து வகையான பண்ணை வளர்ப்பு பன்றிகள் மற்றும் காட்டுப் பன்றிகளைப் பாதிக்கிறது. அதேநேரம் இது பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவாது என்பதால் நாம் கவலை கொள்ளத் தேவையில்லை.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications