யூ டியூப் சேனல் பின்னணியில் அரசியல் சதி...ராஜேந்திர பாலாஜி சந்தேகம்!!
விருதுநகர்: மக்களை பிரிக்கும் செயலில் யூ டியூப் சேனல் ஈடுபட்டுள்ளது. இந்த சேனலின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தின் அதிமுக பொறுப்பாளராக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து இன்று அவர் விருதுநகருக்கு வந்தார். கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''மக்களை பிரிக்கும் நோக்கத்தில் கந்தசஷ்டி பற்றி ஆட்சேபகரமான கருத்தை யூடியூப் சேனல் பதிவு செய்துள்ளது. மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் வேலையில் இந்த சேனல் ஈடுபட்டுள்ளது. இதற்கு பின்னால் பெரிய அரசியல் சதி இருக்கும் என்று நம்புகிறேன். அந்த அரசியல் சதியை தமிழக அரசு ஒடுக்கும்'' என்றார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், சிறப்பாக செயல்பட்டு வரும் அதிமுக அரசு மீது தினமும் ஒரு பொய் செய்தியை ஸ்டாலின் கூறி வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா வந்ததில் இருந்து ஆவின் பால் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் மக்களுக்கு கிடைத்து வருகிறது'' என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications