Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவல நிலையில் ராணி மங்கம்மாள் கட்டிய சத்திரம்.. அமைச்சருக்கு பறந்த கோரிக்கை! உடனே எடுத்த ஆக்சன்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள மறையூரில் ராணி மங்கம்மாள், மருது பாண்டியர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாகத் திகழும் பழமையான சத்திரத்தை தொல்லியல் துறை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள், தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர், தொல்லியல் அதிகாரிகளுடன் ராணி மங்கம்மாள் சத்திரத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டதோடு, அதனை சீரமைக்க உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள மறையூரில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராணி மங்கம்மாள் சத்திரம் அமைந்து உள்ளது. இது கி.பி.1689 முதல் 1706 காலத்தில் தனது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் சார்பாளராக மதுரையை ஆண்டவர் ராணி மங்கம்மாள் அமைத்தது.

thangam thenarasu dmk virudhunagar

இவர் காலத்தில் தான் மரையூர் மற்றும் நரிக்குடி ஆகிய பகுதிகளில் சத்திரங்கள் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தனுஷ்கோடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டு பிற்காலத்தில் பள்ளியாக இயங்கி வந்தது .

இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் சத்திரத்தை சுற்றிலும் மரங்கள் வளர்ந்துள்ளன. இதனிடையே பண்டைய வரலாற்றுக்கு ஆதாரமாக உள்ள இச்சத்திரத்தில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றி, பழுது நீக்கி பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

thangam thenarasu dmk virudhunagar

இந்நிலையில் அந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் நிதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு," நரிக்குடி ஒன்றியம் மறையூரில் அமைந்துள்ள 14, 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ராணி மங்கம்மாள் அன்னச்சத்திரம் இப்பகுதியில் செல்லும் வழிப்போக்கர்களுக்கு நாள்தோறும் அன்னம் வழங்கிய பெருமையுடையது. பழமை வாய்ந்த இச்சத்திரம் தொல்லியல் முக்கியத்துவம் கொண்டது. பராமரிப்பு இன்றி பாழடைந்த நிலையில் உள்ளது.

இச்சத்திரத்தை சீரமைத்து இதன் தொன்மையை மீட்டெடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நம்முடைய மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளோடு‌ இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டோம். எங்களோடு இணைந்து தொல்லியல் துறை அலுவலர்களும் இந்தக் கட்டடத்தின் பழமை குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வினுடைய அடிப்படையில் சத்திரத்தின் பழமை மாறாத வகையில் முழுமையாக சீரமைத்து பாரம்பரிய நினைவுச் சின்னமாக மீட்டெடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

thangam thenarasu dmk virudhunagar

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தொல்லியல் மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் சார்ந்த இடங்களை பாதுகாத்திட தனி கவனம் செலுத்தி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் நடக்கக்கூடிய வெம்பக்கோட்டை அகழ்வாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எனவே தொல்லியல் வரலாற்றில் விருதுநகர் மாவட்டத்தின் முக்கியத்துவம் கருதி பல இடங்களில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நரிக்குடியில் அமைந்துள்ள புகழ்வாய்ந்த வழிப்போக்கர் அன்னச்சத்திர மண்டபத்தை சிறந்த முறையில் சீரமைத்து அதை பாரம்பரிய சின்னமாக பொலிவு பெற மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்" எனக் கூறினார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+