ராஜேந்திர பாலாஜியின் தலைக்கு மேல கத்தி.. ரூ.3 கோடி அள்ளினாரா? விருதுநகர் கோர்ட்டில் இன்று என்னாகுமோ?
விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை, மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. பிறகு ஜூலை 16-ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. அந்தவகையில் இன்றைய தினம் விசாரணை நடைபெறும் என தெரிகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இது அதிமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக கடந்த 2021ல் புகார் அளிக்கப்பட்டது.

அதாவது, விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக ஒரு புகார் தந்திருந்தார்..
விருதுநகர் போலீஸ்
இந்த புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021 நவம்பரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அதே நாளில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபு ராஜ், பலராமன், முத்துபாண்டி ஆகிய 4 பேர் மீதும் மோசடி உட்பட 4 பிரிவுகளில் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தார்கள்..
நீதிபதி உத்தரவு
இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது 2023 ஜனவரியில் ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால், இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம், மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மே19-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஜுன் 16ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது ஜூலை 16-ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று விசாரணை - பரபரப்பு
அந்தவகையில் இன்றைய தினம், விசாரணை நடைபெறும் என தெரிகிறது.. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது..
இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. மேலும் தேர்தலை முன்னிறுத்தி, அதிமுக பொதுச்செயலாளர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார்.. இப்படிப்பட்ட சூழலில், ராஜேந்திர பாலாஜி மீதான விசாரணை நடைபெற உள்ளது, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications