மழை வருது சார்! ட்விட்டரில் லீவ் கேட்ட மாணவன்! என்ஜாய் பண்ணுங்க.. விருதுநகர் ஆட்சியரின் கூல் பதில்!
விருதுநகர் : கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகரில் விடுமுறை அறிவிக்கப்படுமா என ட்விட்டரில் கேள்வி எழுப்பிய மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் கலகலப்பாக பதில் அளித்து இருக்கிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில் வழக்கத்தை விட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. பல ஆண்டுகள் இல்லாத வகையில் மழை பதிவு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக மாணவர்கள் பாதிப்படைய கூடாது என்பதற்காக சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், தஞ்சை மாவட்டம் மற்றும் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்.

விடுமுறை இல்லை
இந்நிலையில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது ஆனால் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழை பெய்யவில்லை இதனை அடுத்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

விருதுநகர் ஆட்சியர்
இந்த நிலையில் விருதுநகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என ட்விட்டரில் கேள்வி எழுப்பிய மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் கலகலப்பாக பதில் அளித்து இருக்கிறார். "சார் சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் இருக்கிறது நாளை பள்ளி கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா" என மாணவர் ஒருவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டியிடம் ட்விட்டர் மூலமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கலகல பதில்
இதற்கு கலகலப்பாக பதில் அளித்துள்ள விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி "இல்லை மாலையில் மழையை ரசித்து விட்டு அடுத்த நாள் காலையில் பள்ளிக்குச் செல்லுங்கள்" என பதில் அளித்து இருக்கிறார் தற்போது மாணவனின் கேள்வியும் ஆட்சியரின் பதிலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மழைக்காலம் ஆரம்பித்ததில் இருந்தே சமூக வலைதளங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர்களை மாணவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு விடுமுறை கேட்பதும் அவர்களுக்கு ஆட்சியர்கள் கலகலப்பாக பதில் அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications