2 ஆடு, 2 மாடு வைத்துள்ளவருக்கு ஏன் Y பிரிவு பாதுகாப்பு? அண்ணாமலையை சீண்டிய பிரேமலதா
விருதுநகர்: 2 ஆடு 2 மாடுகளை வைத்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதற்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்தும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை கண்டித்தும் விருதுநகரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், "நாட்டில் தற்போது கலாச்சார சீர்கேடு நடந்து கொண்டிருக்கிறது. பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டும். பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ வழங்கப்பட வேண்டும். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறார்கள். அது அரசியல் விளையாட்டு. திமுக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் அல்லது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்கி பொதுமக்கள் மற்றும் மாணவர்களை குழப்பாதீர்கள். 50% வரை சொத்துவரியை உயர்த்தலாம். ஆனால், 150% வரி உயர்வை பொதுமக்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சனம் செய்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக மிரட்டல் விடுத்து உள்ளது.
மக்கள் கட்டும் வரி பணத்தில் அண்ணாமலைக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பை அளித்து இருக்கிறது. 2 ஆடு, 2 மாடு, 2 பெட்டி வைத்திருப்பவருக்கு எதற்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும். அண்ணாமலைக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால் Y பிரிவு பாதுகாப்பு வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதட்டும்." எனப் பேசியுள்ளார்.
-
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications