துபாயில் இருந்து பறந்து வந்த தேவா! காத்திருந்தவருக்கு காதலி கொடுத்த ஷாக்! தீபாவளி அதுவுமா இப்படியா?
விருதுநகர் : காதலியை பார்ப்பதற்காக ஆசை ஆசையாய் துபாயில் இருந்து வந்தவரை காதலி பார்க்க மறுத்ததோடு தன்னை மறந்து விடுமாறு கூறியதால் அதிர்ச்சியில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காதல் விவகாரங்களில் சிக்கி தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் இளைஞர்கள் தங்களது பெற்றோரின் எதிர்காலம் குறித்தோ தங்களது குடும்பத்தினரின் நிலை குறித்தோ சற்றும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை. காதல் தோல்வியால் விபரீத முடிவு அல்லது ஒரு தலை காதலால் கொலைவரை செல்லும் பெண்களோ இளைஞர்களோ அதனால் தங்கள் குடும்பம் சந்திக்க போகும் இன்னல்கள் குறித்து யோசிப்பதே கிடையாது
காதல் போனாலும் மீண்டும் ஒரு வாழ்க்கை உள்ளது. தங்களை நம்பி பெற்றோர் உறவினர் என ஒரு சமுதாயம் இருக்கிறது நினைத்துப் பார்த்தால் கொலை தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்குச் செல்ல மாட்டார்கள் அப்படி தங்களது குடும்பத்தை நினைத்துப் பார்க்காத ஒரு இளைஞர் காதலிக்காக எடுத்த விபரீத முடிவால் ஏற்பட்ட சோக சம்பவம் குறித்து பார்க்கலாம்

துபாய் இளைஞர்
விருதுநகர் மாவட்டம் டி.காமராஜர்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவில் பிச்சை. விவசாயி. இவரது மகன் தேவகுமார் (24) துபாயில் ஏசி மெக்கானிக்காக கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தேவகுமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் பார்த்து வந்துள்ளனர்.

காதலி மறுப்பு
இதனை அறிந்த தேவகுமார் தனது பெற்றோரிடம் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த தேவகுமார் காதலியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்து, தன்னுடன் பேசுவதை கைவிடுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

தீக்குளித்து தற்கொலை
இதனால் தேவகுமார் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில கடந்த வியாழக்கிழமை அன்று காதலி பேச மறுத்ததால் விரக்தியடைந்த தேவகுமார் காதலியின் வீட்டின் முன் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்து உள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்தார் தேவா.

பெரும் அதிர்ச்சி
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தந்தை கோவில் பிச்சை அளித்த புகாரின் அடிப்படையில் வாச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications