அமெரிக்காவின் 4 மாகாணங்களை புரட்டிப் போட்ட ‘டெரெகோ’ சூறாவளி.. 2.70 லட்சம் வீடுகளில் மின் துண்டிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவின் 4 மாகாணங்களில் கடந்த வியாழக்கிழமை தாக்கிய கடுமையான சூறாவளியால் மின் கம்பங்கள், வீடுகள் சேதமடைந்தன. சுமார் 2.70 லட்சம் வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கின.
அமெரிக்காவின் இண்டியானா, இல்லினாய்ஸ், டென்னசி மற்றும் ஜார்ஜியா ஆகிய மாகாணங்களில் கடந்த வியாழக்கிழமை கடுமையாக டெரெகோ சூறாவளி வீசியது. டெரிகோ என்று அழைக்கப்படும் இந்த சூறாவளி தாக்கியதால் அமெரிக்காவின் நான்கு மாகாணங்களில் கிட்டத்தட்ட 270,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தாக்கிய இந்த புயல் டெரெகோ என்று அழைக்கப்படுகிறது. ஒரு டெரெகோ என்பது வலுவான இடியுடன் கூடிய கனமழையை வரவழைக்கும் புயல் காற்று. டெரெகோ புயலின்போது காற்று பயங்கர வேகத்தில் வீசும். ஆபத்தான ரெரெகோ புயலின்போது, காற்று 100 மைக் வேகத்தை விட அதிகமாக இருக்கும்.
அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளி புயல் காற்றால் மரங்கள், ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் விழுந்துள்ளன. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்த சூறாவளி மத்திய அமெரிக்கா முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது.
பல இடங்களில் வாகனங்கள் தூக்கி வீசப்ப்பட்டன. நெடுஞ்சாலையின் குறுக்கே மின் கம்பிகள் சாய்ந்ததால், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது.
இல்லினாய்ஸில் வீசிய பலத்த புயல் விவசாய நிலங்களையும், வீடுகளையும் பந்தாடியுள்ளது. ஏராளமான பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. எனினும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இல்லினாய்ஸில் 106,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இண்டியானாவில் 141,000 க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்தனர். அதே நேரத்தில் டென்னசி மற்றும் ஜார்ஜியாவில் 27,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வரை மின்சாரத்தை மீட்டெடுக்க முடியாது, இதே நிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications