வளர்ப்பு மகளை திருமணம் செய்ய.. மனைவிக்கு விஷம் கொடுத்த 71 வயது தந்தை! ஐடியா கொடுத்ததே மகள்தானாம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக 71 வயது முதியவர் ஒருவர் தனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அப்போது அந்த நபர் கூறிய தகவல்கள் அதிர வைப்பதாக இருக்கிறது.
அமெரிக்காவில் 71 வயதான ஆல்ஃபிரட் டபிள்யூ. ரூஃப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றத்தைக் கேட்டால் நமது குலையே நடுங்குவதாக இருக்கிறது.

வளர்ப்பு மகள்: தனது வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து கொள்ள 71 வயதான இந்த நபர் மனைவியின் கோகோ கோலாவில் தொடர்ந்து போதைப் பொருள் மிக்ஸ் செய்து கொலை செய்ய முயன்றுள்ளார். இந்தக் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கொலை முயற்சி குற்றச்சாட்டில் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டில் ரூஃப்பின் மனைவிக்குத் தொடர்ச்சியாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி தொடர்ந்து பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தலைவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை அதிகம் இருந்துள்ளது. மருத்துவமனையில் நடந்த சோதனையில் அவரது உடலில் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. போதைப் பொருள் காரணமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்த பெண் தான் போதைப் பொருளைப் பயன்படுத்தவில்லை என்றே தொடர்ந்து கூறியிருக்கிறார்.
ஒப்புக் கொண்ட கணவர்: இதற்கிடையே ஒரு நாள் ரூஃப் தனது மனைவியிடம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து கொள்ளவே விஷம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதைக் கேட்டதும் அதிர்ந்த அந்த பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர்.
தனது மனைவியின் பானத்தில் மகள் கொடுக்கும் "மர்மப் பொருளை" கலந்து வந்ததாக ரூஃப் ஒப்புக் கொண்டார். இதையடுத்து ரூஃப்பிடம் இருந்த போதைப் பொருளையும் போலீசார் கைப்பற்றினர். ரூஃப் விசாரணைக்காக போலீசாரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ரூஃப் சொன்ன தகவல்கள் போலீசாரை அதிர வைத்தது.
மகளின் தோழி: அதாவது தனது மனைவிக்கு முந்தைய திருமணத்தில் பிறந்த மகள் ஒருவர் இருக்கிறார். அதாவது ரூஃப்பிற்கு வளர்ப்பு மகள் உறவாகும். மகள் என்று கூட பார்க்காமல் ரூஃப் அவருடன் உடலுறவு வைத்துள்ளார். மகள் மட்டுமின்றி அவரது தோழியுடனும் உடலுறவு வைத்துள்ளார். மனைவிக்கு போதை மருந்து கொடுக்கும் போதெல்லாம் மூவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதை எல்லாம் அவரே தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
ஐடியா கொடுத்த மகள்: மேலும், வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கொள்ளக் கூட முடிவு செய்துவிட்டாராம். ஆனால் தனது மனைவி இதற்குத் தடையாக இருப்பார் என்று ரூஃப் யோசித்துள்ளார். அப்போது அந்த வளர்ப்பு மகள்தான் தனது தாயைக் கொலை செய்ய ஐடியா கொடுத்துள்ளார்.
மனைவி இறந்து விட்டால் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.. மேலும், இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்கும் என்பதால் ரூஃப் இந்த பிளானுக்கு ஓகே சொல்லிவிட்டார். இதையடுத்து தனது மனைவி குடிக்கும் பானத்தில் சிறிது சிறிதாக போதைப் பொருளை அவர் கலந்து வந்துள்ளார். இப்படியே மெல்லப் போதைப் பொருளைக் கொடுத்து மனைவியைக் கொல்ல வேண்டும் என்பதே ரூஃப் திட்டமாக இருந்துள்ளது. இந்த வழக்கில் அந்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications