வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கம்பேக் கொடுத்த டிரம்ப்! காரணமே இந்த எலான் மஸ்க் தான்! ட்விட்டரில் காத்திருக்கும் பெரிய சம்பவம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ள நிலையில், டிரம்ப் ட்விட்டர் கணக்கு குறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ட்விட்டரை வாங்கினார். அப்போது முதலே அவர் ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

குறிப்பாகத் தான் பேச்சுரிமைக்கு எப்போதுமே ஆதரவானவன் என்று கூறிக் கொள்ளும் எலான் மஸ்க், ட்விட்டரில் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்ட நபர்களின் தடையை நீக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

அடிதூள்! எலான் மஸ்க் எல்லாம் சைட்ல போகலாம்! கலக்கும் இந்திய கம்பெனி! வியந்து பார்க்கும் உலக நாடுகள் அடிதூள்! எலான் மஸ்க் எல்லாம் சைட்ல போகலாம்! கலக்கும் இந்திய கம்பெனி! வியந்து பார்க்கும் உலக நாடுகள்

 டிரம்ப்

டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த 2020இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். ஆனால், மக்கள் தன்னை நிராகரித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்ளாத டிரம்ப், தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடந்துள்ளதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டினார். ரோடுகளில் இறங்கிப் போராடினால் மட்டுமே அமெரிக்க ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என்றெல்லாம் அடித்துவிட்டார்.

வன்முறை

வன்முறை

இது அங்குக் குழப்பமான சூழலை உருவாக்கியது. போராட்டம் தொடர்ந்த நிலையில், அது திடீர் வன்முறையாக மாறியது. 2021 ஜன. 6ஆம் தேதி அதிபரை அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வின் போது, டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்து ரகளை செய்தனர். இதில் சிலர் உயிரிழக்கவும் செய்தனர். அமெரிக்க வரலாற்றில் இது கருப்பு நாளாகக் கருதப்படுகிறது.

 நிரந்தர தடை

நிரந்தர தடை

இந்தச் சம்பவம் காரணமாக ட்விட்டர் உட்பட பல்வேறு சமூக வலைத்தளங்களும் டிரம்பிற்கு நிரந்தர தடை விதித்தன. பேச்சுரிமைக்கு எதிரான நடவடிக்கை என்று டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதைக் கடுமையாகக் கண்டித்த போதிலும், எந்தவொரு சமூக வலைத்தளமும் டிரம்ப் மீதான தடையை நீக்கவில்லை. சுமார் 2 ஆண்டுகளாக இந்தத் தடை தொடர்கிறது. இதற்கிடையே டிரம்ப் தனக்கென சொந்தமாக ஒரு சமூக வலைத்தளத்தையே தொடங்கிவிட்டார்.

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இதற்கிடையே ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய நிலையில், டிரம்ப் உட்பட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே எலான் மஸ்க் சமீபத்தில் டிரம்பை மீண்டும் டிவிட்டரில் அனுமதிப்பது தொடர்பாக நெட்டிசன்களிடம் கருத்துக் கேட்டிருந்தார். இது குறித்து ட்விட்டரில் போலிங்கையும் நடத்தி இருந்தார்.

 நீக்கம்

நீக்கம்

இந்த போலிங்கில் சுமார் 1.5 கோடி ட்விட்டர்வாசிகள் வாக்களித்து இருந்தனர். அவர்களில் 51.8% பேர் டிரம்பிற்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் 48.2% பேர் அனுமதிக்கக் கூடாது என்று வாக்களித்து உள்ளனர். பெரும்பான்மையான வாக்குகள் டிரம்பிற்கு ஆதரவாக விழுந்ததால், மீண்டும் டிரம்ப் ட்விட்டரில் அனுமதிக்கப்படுவார் என்று எலான் மஸ்க் அரிவிது உள்ளார்.

 மீண்டும் வரும் டிரம்ப்

மீண்டும் வரும் டிரம்ப்

மக்களின் குரலே கடவுளின் குரல் எனப் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், "மக்கள் தங்கள் விருப்பத்தைக் கூறிவிட்டனர். இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். மிக விரைவில் டிரம்பின் ட்விட்டர் பக்கம் செயல்பாட்டிற்கு வரும்" என்று பதிவிட்டுள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்திலேயே, டிரம்ப் பக்கம் மீண்டும் ட்விட்டரில் வந்தது.

 வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

உலகளவில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவராக டிரம்ப் இருந்தார். டிரம்ப் மீண்டும் 2024 அதிபர் தேர்தலில் களமிறங்க முடிவு செய்துள்ள நிலையில், ட்விட்டர் கணக்கு மீண்டும் அவருக்குக் கிடைத்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு குடியரசு கட்சியினரும் டரம்பை வரவேற்றுள்ளனர். இருப்பினும், தனக்கு மீண்டும் ட்விட்டரில் வருவது விருப்பம் இல்லை என்றும் சொந்த சமூக வலைத்தளத்திலேயே இருப்பேன் என்றும் டிரம்ப் கூறியுள்ளது நினைவுகூரத்தக்கது.

English summary
Donald Trump is Back On Twitter, nearly after 2 years of Permantent Ban: US Presidental election big advantage to Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X