‛நிர்வாணம்’.. உடலில் ஒட்டுத்துணி இல்லை.. பெண்களின் அறைக்குள் நுழைந்த கல்லூரி மாணவர்.. அடக்கொடுமையே
வாஷிங்டன்: அமெரிக்காவில் உடலில் ஒட்டுத்துணி இன்றி பெண்கள் வசிக்கும் அறைக்குள் நுழைந்து அத்துமீறி செயல்களில் ஈடுபட்ட கல்லூரி மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கெய்னெஸ்வில்லி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. வெஸ்ட் யூனிவர்சிட்டி அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 பெண்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்வத்தன்று அவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியே சென்றனர். ஷாப்பிங் உள்பட அவர்களின் பணியை முடித்துவிட்டு 2 பெண்களும் இரவு நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கு திரும்பினர்.

சிதறி கிடந்த பொருட்கள்
இந்த வேளையில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவர்கள் வசித்து வரும் அறையில் கதவு உடைந்துபோய் இருந்தது. வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. யாரோ மர்மநபர்கள் வீட்டுக்குள் நுழைந்து இருப்பதாக அவர்கள் நினைத்தனர். மேலும் பெட்ரூம் சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நிர்வாணமாக நின்ற நபர்
பெட்ரூமில் மர்மநபர் ஒருவர் உடலில் ஆடைகள் எதுவும் இன்றி நிர்வாணமாக நின்று கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இரு பெண்களும் வீட்டை விட்டு வெளியே ஓடினர். இதையடுத்து அந்த நபரும் அங்கிருந்து வெளியேறினார். இதுபற்றி இரு பெண்களும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

கல்லூரி மாணவர் கைது
இந்த வேளையில் மர்மநபர் வெறும் ஷாட்ஸ் மட்டுமே அணிந்து அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து இருப்பதோடு, வீட்டு பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கல்லூரியில் படித்து வரும் அல்பெர்டோ ஆராயா (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவி என பொய்கூறிய மாணவர்
அல்பெர்டோ ஆராயாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர் தனக்கு திருமணம் ஆனதாகவும், மனைவியை தேடி அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றபோது சம்பவம் நடந்ததாக தெரிவித்தார். மேலும் அறைக்கு வந்த 2 பெண்களில் ஒருவர் தான் தனது மனைவி எனவும் அவர் கூறினார். இதுபற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது அவருக்கு திருமணம் எதுவும் நடக்காததும், அவர் போலீசை ஏமாற்ற முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து திருட்டு உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் அல்பெர்டோ ஆராயா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications