வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பின் கடைசி கிறிஸ்துமஸ்...மெலானியாவின் சொக்க வைக்கும் அலங்காரம்

அதிபர் ட்ரம்பின் மனைவியான மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையின் ஒவ்வொரு பகுதியையும் அழகுபடுத்தி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையின் ஒவ்வொரு பகுதியையும் அழகு படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், அழகான அமெரிக்கா என்ற தலைப்பில் தாம் மேற்கொண்டுள்ள அலங்காரங்களை காட்சி படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

America the Beautiful Christmas at the WhiteHouse

கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையிலும் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. கிறிஸ்துமஸ் என்னும் ஒளி வெள்ளம் மூலம் கொரோனா இருளை விரட்ட முடியும் என்று நம்புகின்றனர் அமெரிக்கர்கள். வெள்ளை மாளிகையும் கிறிஸ்துமஸ் அலங்காரங்களினால் களைகட்டியுள்ளது.

நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதை அடுத்து, வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் குடும்பத்திற்கு இது கடைசி கிறிஸ்துமஸ் விழாவாகும். வெள்ளை மாளிகையின் ஒவ்வொரு பகுதியையும் அழகாக செதுக்கியுள்ளார் மெலானியா ட்ரம்ப்.

ஒவ்வொரு ஆண்டும் கேக் செய்வதற்கு 181 கிலோ மாவு, பேஸ்ட், சாக்லேட் உள்ளிட்டவை தயாராக வைக்கப்படும். இத்துடன் இந்த ஆண்டு ரோஜாத் தோட்டம் புதிதாக இணைந்துள்ளது. முழுக்க முழுக்க பெண்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கம்பீரத்தைப் பறைசாற்றும் விதமாகவும் அதனை உலகுக்கு எடுத்துக்காட்டும் விதமாகவும் இது இருக்கும் என்று கூறியுள்ளார் மெலனியா ட்ரம்ப்.

மேற்கு விர்ஜினியாவின் ஷெஃபர்ட்ஸ்டவுனில் இருந்து உயரமான ஃபிர் மரங்கள் வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள 125க்கும் மேற்பட்ட மாணவர்களும் தன்னார்வலர்களும் இணைந்து வெள்ளை மாளிகையை அலங்கரித்துள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில், நாட்டின் சில அழகான பகுதிகளுக்குச் சென்று இரக்க குணமுள்ள, தேசபக்தி கொண்ட அமெரிக்க குடிமக்களைச் சந்தித்த பெருமை தனக்கு கிடைத்ததாக மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நம் நாட்டின் மரபுகள், மதிப்புகள் மற்றும் வரலாறு குறித்த பாராட்டுக்கள் எல்லாம் அனைத்து அமெரிக்கர்களைச் சாரும் என்றும் கூறியுள்ளார். ட்ரம்ப் தனது குடும்பத்தோடு கடைசி கிறிஸ்துமஸ் விழாவை வெள்ளை மாளிகையில்
கொண்டாடப்போகிறார் அதற்காகவே பார்த்து பார்த்து ஒவ்வொரு பகுதியாக அலங்கரித்துள்ளார் மெலனியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+