வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடிக்கடி பூமிக்கு விசிட் அடிக்கும் ஏலியன்கள்? கண்காணிக்க தனி டீமை களமிறக்கிய நாசா! விலகுமா மர்மம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பறக்கும் தட்டுகள் மற்றும் ஏலியன்கள் குறித்த விவாதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக நாசா தனி டீமை களமிறக்கி உள்ளது.

Recommended Video

    China-வில் தோன்றிய UFO | America போட்ட தப்புக்கணக்கு | Unidentified Objects in US, Canada, China

    நம்மைப் போலவே இந்த பிரபஞ்சத்தில் மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் வசிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இப்படி மற்ற கிரகங்களில் வசிக்க வாய்ப்புள்ள உயிரினங்கள் வேற்று கிரக வாசிகள் எனப்படும்.

    கடந்த காலங்களில் கூட வேற்று கிரகவாசிகள் நமது பூமிக்கு வந்து இருக்கலாம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பாக ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகிறது.

    என்னங்க இது புதுசா! வளிமண்டலத்தில் தென்பட்ட திடீர் நீல நிற 'குமிழ்கள்'.. விளக்கம் அளித்த நாசா என்னங்க இது புதுசா! வளிமண்டலத்தில் தென்பட்ட திடீர் நீல நிற 'குமிழ்கள்'.. விளக்கம் அளித்த நாசா

     பறக்கும் தட்டுகள்

    பறக்கும் தட்டுகள்

    குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வேற்று கிரகவாசிகள் UFOs எனப்படும் பறக்கும் தட்டுக்குள் மூலம் பூமிக்கு வந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாகவே பூமியில் இந்த பறக்கும் தட்டுகள் குறித்த மர்மம் நீடித்தே வருகிறது. இதுவே ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கான காரணம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

     நாசா ஆய்வு

    நாசா ஆய்வு

    அதேநேரம் மற்றொரு தரப்பினர் பறக்கும் தட்டுகள் என்றெல்லாம் எதுவும் இல்லை. இவர்கள் எதையோ பார்த்துவிட்டு தவறாகப் பறக்கும் தட்டுகள் என்று நினைத்துக் கொள்வதாகக் கூறுகின்றனர். இது தொடர்பாக நாசா ஆய்வு நடத்தி வருகிறது. சமீபத்தில் கூட விமான பைலட்கள் சிலர் தாங்கள் பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாக கூறி இருந்தனர். தற்போது நம்மிடம் இருக்கும் தரவுகளைக் கொண்டு இது குறித்த ஆய்வுகள் நடந்து வருகிறது.

     தனி டீம்

    தனி டீம்

    பெரும்பாலும் வட்டமான வடிவில் இந்த பறக்கும் தட்டுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இது குறித்து ஆய்வுகள் நடந்தாலும் பல்வேறு கேள்விகளுக்கு விடை இல்லை. அதேபோல அது எங்கு இருந்து வருகிறது எங்கே செல்கிறது என்பது குறித்தும் நமக்கு எதுவும் தெரியவில்லை. இதனிடையே இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள 16 ஆய்வாளர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை நாசா அமைத்து உள்ளது.

     9 மாதங்கள் ஆய்வு

    9 மாதங்கள் ஆய்வு

    பறக்கும் தட்டுக்கள் குறித்து அடுத்து 9 மாதங்களுக்கு இவர்கள் விரிவான ஆய்வை செய்ய உள்ளனர். இதன் மூலம் பறக்கும் தட்டுகள் குறித்த பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நாசா தனது ட்விட்டரில், "பறக்கும் தட்டுகள் குறித்த ஆய்வுக்காக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக். 24ஆம் தேதி தொடங்கி அடுத்த 9 மாதங்களுக்கு இவர்கள் ஆய்வு செய்வார்கள்" என்றார்.

     அமெரிக்க அதிகாரி

    அமெரிக்க அதிகாரி

    இந்த ஆண்டு தொடக்கத்தில், அமெரிக்க உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நாடாளுமன்றத்தில், கடந்த 20 ஆண்டுகளில் பறக்கும் தட்டுகள் அதிகரித்துவிட்டதாகக் குறிப்பிட்டார். 2000க்கு பின் அமெரிக்க பைலட்கள் பயிற்சி பெறும் பகுதிகளில் இதுபோன்ற பறக்கும் தட்டுகளைக் கண்டறியும் நிகழ்வுகள் அதிகரித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    English summary
    Special team is formed to investigate about UFOs seen in the skies: All things to know about UFOs in the skies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X