ஏரியா 51ஐ சுற்றி வந்த ஏலியன்கள்.. சுட்டு கொன்ற அமெரிக்க வீரர்கள்! முன்னாள் ஸ்னைப்பர் அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் ரகசிய ராணுவ தளமான ஏரியா 51 அருகே சீக்ரெட் ஆபரேஷன் சமயத்தில் 3 ஏலியன்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் ஸ்னைப்பர் ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இந்த மோதலில் அமெரிக்க வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் சம்பவ இடத்திலேயே எரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஏரியா 51 அருகே தான் ஏலியன் தொடர்பான ஆய்வுகள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஏலியன்கள் தொடர்பாக அமெரிக்க முன்னாள் ராணுவ ஸ்னைப்பரும், 'லிபர்ட்டிரிஸ்க்' பாட்காஸ்டின் தொகுப்பாளருமான நிக்பெட்ஸ் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். சர்வதேச ஊடகமான 'டெய்லிமெயில்' இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது.

Alien

என்ன நடந்தது!

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் தான் ரகசிய ராணுவ தளமான ஏரியா 51 இருக்கிறது. அங்கு தான் 3 ஏலின்கள் கொல்லப்பட்டதாக நிக் பெட்ஸ் கூறினார். அதில் ஒரு அமெரிக்க வீரர் கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் அங்கேயே எரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷனில் பெட்ஸ் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டு சிறப்பு படையில் உள்ள ஒருவர் தனக்கு இந்த தகவலை தெரிவித்தாக அவர் குறிப்பிட்டார்.

சீக்ரெட் ஆபரேஷனின் ஒரு பகுதியாக நிலத்திற்கு அடியே சுரங்கத்தில் வீரர்கள் சென்றார்களாம். அவர்களுக்கு வழக்கமான துப்பாக்கிகளுக்கு பதிலாக, எனர்ஜியை குறிப்பிட்ட இடத்தில் பீய்ச்சி அடிக்கும் அதிநவீன துப்பாக்கிகளை வழங்கியுள்ளனர். அங்கு இரண்டு கால்களில் நடக்கக்கூடிய, ஊர்வன போன்ற தோற்றம் கொண்ட உயிரினத்தை எதிர்கொண்டுள்ளனர். அந்த உயிரினமும் கூட துப்பாக்கி போன்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்தியதாக பெட்ஸ் கூறினார்.

உயிரிழப்பு

இந்த மோதலின்போது அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் மார்பில் குண்டு பாய்ந்து, அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வீரர்கள் சேர்ந்து அந்த ஏலியனை சுட்டு கொன்றுள்ளனர். மொத்தமாக இந்த ஆபரேஷனில் மூன்று ஏலியன்கள் கொல்லப்பட்டதாக பெட்ஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக தன்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

உடல் எரிப்பு

இந்த சம்பவத்தில் உயிரிழந்த அமெரிக்க வீரரின் உடல் சம்பவ இடத்திலேயே எரிக்கப்பட்டதாகவும் பெட்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்த வீரர் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது உடலை எரிப்பதற்கு உடன் இருந்த மற்ற வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், அந்த எதிர்ப்பையும் மீறி உடல் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த ஏலியன் தாக்குதல் குறித்து மறைத்துவிட்டு, அந்த வீரர் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததாக மட்டும் அதிகாரிகள் அறிக்கையை வெளியிட்டதாக பெட்ஸ் கூறியுள்ளார்.

போலந்தில் ஒரு நாள் இரவில் இந்த ஆபரேஷனில் பங்கேற்ற அமெரிக்க வீரர் ஒருவரே தன்னிடம் மது அருந்தியபடி இந்த தகவல்களை எல்லாம் கூறியதாகவும் பெட்ஸ் கூறினார். மறுநாள் காலை, இந்த ஆபரேஷனில் பங்கேற்ற மற்றொரு நபரிடம் இந்த ஏலியன் ஆபரேஷன் கூறித்து பெட்ஸ் கேட்டுள்ளார். உடனே அந்த வீரர் தனது கழுத்தை பிடித்து சுவரில் மோதி தாக்கியதாகவும் இது குறித்து மீண்டும் பேசக்கூடாது என்று எச்சரித்ததாக பெட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏரியா 51

அமெரிக்காவின் நெவாடா பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளம் தான் ஏரியா 51, இது மற்ற வழக்கான ராணுவ தளங்களை போல இல்லை. கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கொண்ட ராணுவத் தளமாகும். ரகசிய விமான சோதனைகளுக்காக இந்தத் தளம் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா கூறினாலும், இந்த இடத்தில் தான் அமெரிக்கா ஏலின் குறித்த ஆய்வுகளை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+