பெர்முடா முக்கோணத்தின் ரகசியத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்! மர்மம் விலகியது!
வாஷிங்டன்: பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்த விமானங்கள், கடல் பரப்பில் பயணித்த கப்பல்கள் திடீரென காணாமல் போனது விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவங்களுக்கும் பெர்முடா தீவுக்கும் சம்பந்தம் இருப்பதாக அவர்கள் கருதி வந்த நிலையில், தற்போது இந்த தீவின் ரகசியத்தை கண்டுபிடித்திருக்கின்றனர்.
வடஅமெரிக்காவை ஒட்டியிருக்கும் வட அட்லான்டிக் பெருங்கடல் பகுதியில்தான் பெர்முடா முக்கோணம் இருக்கிறது. இந்த பகுதியில் பயணிக்கும் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மர்மமான முறையில் காணாமல் போவதுதான் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது. முதற்கட்ட ஆய்வில் பெர்முடா பகுதியில் இருக்கும் தீவுதான் விஞ்ஞானிகளுக்கு வித்தியாசமாக தெரிந்தது.

வித்தியாசமான தீவு
இந்த தீவு உலகின் மற்ற எந்த தீவுகளை விடவும் உயரமானதாக இருந்தது. அதெப்படி? இது மட்டும் இவ்வளவு ஹைட்டா இருக்கு என்று விஞ்ஞானிகள் ஆய்வை தொடங்கினர். யேல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளான ஜெஃப்ரி பார்க் மற்றும் கார்னகி அறிவியல் நிறுவனத்தின் நில அதிர்வு நிபுணர் வில்லியம் ஃபிரேசர் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.
வெளிவந்த உண்மை
இந்த தீவின் அமைப்பை புரிந்துக்கொள்ள மற்ற தீவுகளையும் அவர்கள் ஸ்டடி செய்தனர். ஹாவாய் போன்ற எரிமலை தீவுகள், பூமியின் ஆழமான மேன்டில் எனப்படும் பகுதியிலிருந்து மேல்நோக்கி வரும் 'மேன்டில் புளூம்' எனப்படும் வெப்பமான மிதக்கும் பாறைகள் மூலம் உருவாகியிருக்கின்றன. இந்த உருகிய பாறைகள் மேல் நோக்கி தள்ளப்படும்போது கடல் மட்டத்தின் மேல் பகுதியில் எரிமலைகள் உருவாகின்றன.
ஆனால் காலப்போக்கில் டெக்டானிக் தகடுகள் நகரும்போது, எரிமலை செயல்படாமல் போய், அந்த தீவு கடலுக்குள் மூழ்கிவிடும். உலகம் முழுவதும் இதுதான் நடக்கிறது. ஆனால் பெர்முடா தீவில் மட்டும் இப்படி நடக்கவில்லை என்பதை விஞ்ஞானிகள் தங்கள் ஸ்டடியில் தெரிந்துக்கொண்டனர்.
இயல்பாகவே வளர்ந்த தீவு
பெர்முடா தீவு இப்போதும் கடல் தளத்தை விட சுமார் 1600 அடி உயர்த்தில் இருக்கிறது. எனவே தீவின் சுமார் 32 கி.மீ ஆழம் வரை அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், 19வது கி.மீ ஆழத்தில் புதிய பாறை அடுக்கை கண்டுபிடித்தனர். இந்த பாறைகள் முன்னர் நாம் பார்த்த மேன்டில் பாறைகளைவிட அடர்த்தி குறைவாகவும், மிதக்கும் தன்மையுடனும் இருந்தது. அதாவது எந்த எரிமலை குழம்பும் இந்த பாதையை மேலே முட்டி தள்ளவில்லை. மாறாக இயல்பாகவே இது மிதக்கும் தன்மையுடன் இருக்கிறது.
கார்பன் பாறைகள்
எப்படி இது சாத்தியம்? உலகின் வேறு எங்கும் இல்லாத பாறைகள் இங்கு மட்டும் எப்படி இருக்கிறது? என்று மேலும் ஆய்வை தொடங்கினர். இப்படியே ஆய்வு செய்துக்கொண்டே போனால் இதுக்கு ஒரு எண்டே இல்லையா? என ஆய்வாளர்கள் டென்ஷன் ஆனார்கள். இருப்பினும் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த பாறைகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே எரிமலைகள் ஆக்டிவாக இருந்த காலத்தில் உருவாகியிருக்கிறது என்றும், கார்பன் உருகி பாறையாக மாறியதால்தான் இது இப்படி மிதக்கிறது என்று கண்டுபிடித்து கூறியிருக்கின்றனர்.
இந்த தீவின் தன்மைதான் அதனை சுற்றியிருக்கும் கடல் பகுதிகளை மாற்றியிருக்கிறது என்றும், வானிலை மாற்றத்திற்கும் இது காரணமாக இருந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். பெர்முடா முக்கோண பகுதியில் போன கப்பல்கள், விமானங்கள் காணாமல் போன சம்பவத்திற்கு காரணம் திடீர் வானிலை மாற்றமாக இருந்திருக்கலாம். தவிர, இதில் எந்த மர்மமும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications