இது மிகவும் ஆபத்தானது.. உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்திய டிரம்புக்கு பில்கேட்ஸ் கண்டனம்
வாஷிங்டன்: உலக சுகாதார நிறுவனத்திற்கன நிதியை நிறுத்திய அதிபர் டிரம்புக்கு உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

அத்துடன் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் அந்த பிரச்சனையை சமாளிப்பதில் தவறான நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பு எடுத்ததாகவும், இந்த வைரஸ் தொற்று பரவல் குறித்த உண்மைகளை மூடிமறைத்தாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா சார்பில்அளிக்கப்பட்டு வரும் நிதியையும் நிறுத்தி உள்ளார்.
இதற்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் கவலை தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில். "உலக மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவோம். சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும், உயிர்காக்கும் சேவைகளை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து செயல்படுவோம்.
நாங்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு நிதி இடைவெளிகளையும் நிரப்புவதற்கும் எங்கள் பணி தடையின்றி தொடருவதை உறுதி செய்வதற்கும் எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவோம்" என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிமைடயே மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலக செல்வந்தர்களில் ஒருவருமான பில்கேட்ஸ், உலக சுகாதார நிறுவனத்திற்கன நிதியை நிறுத்திய அதிபர் டிரம்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டுவிட் பதிவில் " கொரோனாவால் உலக அளவில் சுகாதார அவசர நிலை நிலவும் இந்த சூழலில் உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுவத்துவ மிகவும் ஆபத்தானது. உலக சுகாதார அமைப்பு செய்யும் பணியால் தான் கொரோனா பரவல் மெதுவாக உள்ளது.
Halting funding for the World Health Organization during a world health crisis is as dangerous as it sounds. Their work is slowing the spread of COVID-19 and if that work is stopped no other organization can replace them. The world needs @WHO now more than ever.
— Bill Gates (@BillGates) April 15, 2020
உலக சுகாதார அமைப்பினரின் பணிகளை நிறுத்தினால் வேறு எந்த அமைப்பாலும் அவர்கள் செய்த பணியை செய்ய முடியாது. உலக சுகாதார அமைப்பின் தேவை எப்போதும் விட இப்போது அதிகமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications