தலைமுறை காணாத கடும் குளிர்.. பனிப்புயலால் உறைந்த அமெரிக்கா..களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
வாஷிங்டன் : தொடர் பனிப்பொழிவு, கடும் குளிர் காற்று காரணமாக, அமெரிக்காவே ஸ்தம்பித்துள்ளது.இந்த சீசனில் முதல் முறையாக மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, கடுமையான பனிப்பொழிவு மற்றும் உறைபனி வெப்பநிலை காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் குளிர் கால புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக அமெரிக்காவில் இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது. பல மாநிலங்களில், வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளது. அதே சமயம் தொடர் பனிப்பொழிவும் மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது.

இதற்கிடையில், இந்த சீசனில் முதல் முறையாக மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, கடுமையான பனிப்பொழிவு மற்றும் உறைபனி வெப்பநிலை காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர் பனிப்பொழிவு, இடைவிடாத மழை மற்றும் குளிர் காற்று காரணமாக, அமெரிக்கா முழுவதும் விமானப் பயணம் தவிர, சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான கண்காணிப்பு தளமான ஃப்ளைட்அவேர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களும் வெள்ளிக்கிழமைகளில் சுமார் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், சனிக்கிழமைக்கான 85 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. விமான கண்காணிப்பு இணையதளமான Flightaware.com வியாழன் அன்று 22,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகிவிட்டதாக காட்டியுள்ளது. சுமார் 5,500 விமானங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன என்று கூறப்படுகிறது.
பல இடங்களில் சாலைகள் பனியினால் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், அதனை சரி செய்ய தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். தெற்கு டகோட்டாவில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனிகட்டிகள் குவிந்துள்ளதால் மக்கள் கடும் குளிரால் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். மோசமான வானிலை நிலவுவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அங்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த தலைமுறையிலேயே யாரும் காணாத குளிர் கால புயல் அமெரிக்காவை தலை கீழாக புரட்டிப்போட்டுள்ளது. மோசமான வானிலையால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன. இந்த புயல் பற்றி செய்தியளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நீங்கள் குழந்தையாக இருந்தபோது பனி பெய்கிறது என்றால் உற்சாகமடைவீர்கள். ஆனால், தற்போது அதுபோல இல்லை ஏன்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications