ஆபாச அழகி விவகாரம்.. வசமாக சிக்கிய டிரம்ப்.. 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் ஆபாச அழகியிடம் பணம் கொடுத்த விவகாரத்தில் இப்போது வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளார். இதனால் அவரால் வரும் தேர்தலில் போட்டியிட முடியுமா என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக 2020 தொடக்கம் வரை இருந்தவர் டிரம்ப். இவர் அமெரிக்க அதிபராக இருந்த போது தொடர்ச்சியாக ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் அவர் பைடனிடம் தோல்வியடைந்திருந்தார்.
இதற்கிடையே 2016 தேர்தல் சமயத்தில் நடந்த ஒன்று தான் இப்போது அவருக்கு எதிராக மாறியுள்ளது. டிரம்ப் கடந்த காலங்களில் எப்போதுமே ஒரு பிளே பாயாகவே இருந்து வந்துள்ளார்.

டிரம்ப்
இளமைக் காலம் முதலே பல பெண்களுடன் உறவில் இருந்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க 2016 காலகட்டத்தில் தேர்தலில் களமிறங்கினார். அப்போது தனது பாலியல் உறவுகள் குறித்து வெளியே வராமல் பார்த்துக் கொண்டார். இருப்பினும், அப்போது அமெரிக்கா ஆபாசப் படப் பிரபலம் ஸ்டோர்மி டேனியல்ஸ் டிரம்ப் தன்னுடன் நெருக்கமாக இருந்ததாகத் தனது புத்தகத்தில் தெரிவித்திருந்தார். டிரம்ப் மனைவி மெலினா குழந்தை பிறப்புக்காகச் சென்றிருந்த போது டிரம்ப் இப்படி தன்னுடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறியிருந்தார்.

பணம் கொடுத்த டிரம்ப் தரப்பு
இது தேர்தலில் டிரம்பிற்கு எதிராக மாறும் என்று அஞ்சப்பட்டது. இதையடுத்து டிரம்ப் தரப்பு ஸ்டோர்மி டேனியல்ஸை தொடர்பு கொண்டு, ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. அதாவது தன்னைப் பற்றியும் தன்னுடன் இருந்த உறவு குறித்தும் பொதுவெளியில் பேசக் கூடாது என்று ஒரு அக்ரிமெண்டை போட்டு, அதற்காக ஸ்டோர்மி டேனியல்ஸிடம் 1.30 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி) கொடுத்துள்ளனர். இப்படிப் பணம் கொடுத்தது எந்தவொரு விதிமீறலும் இல்லை.

என்ன குற்றச்சாட்டு
ஆனால், இந்த பணம் டிரம்ப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டது. மேலும் பிரச்சார நிதிச் சட்டங்களின் அடிப்படையில் இது முறையாகக் கணக்குக் காட்டப்படவில்லை. டிரம்பிற்கு தெரிந்தே இது நடந்துள்ளது என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஒட்டுமொத்த செட்அப்பும் நமக்குச் சாதகமாக இருந்தும் கூட நாம் சொதப்பினால் என்ன ஆகும். அது தான் டிரம்பிற்கும் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில், டிரம்பின் வழக்கறிஞராக இருந்து இந்த ஒப்பந்தத்தைப் போட்ட மைக்கேல் கோஹன் அவருக்கு எதிராகவே வாக்குமூலம் அளித்துள்ளார்.

போட்டியிட முடியுமா
இதுவும் அடுத்த பிரச்சினையாக மாறியுள்ளது. இப்போது ஜூரி டிரம்ப் குற்றம் செய்தவராக இருக்கலாம் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளது. இதனால் டிரம்ப் மீது அடுத்தகட்ட விசாரணை தொடங்கப்படும். டிரம்ப் 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், இந்த தீர்ப்பு அவரை தடுக்குமோ என்று சிலர் அஞ்சினர். இருப்பினும், இந்த தீர்ப்பு டிரம்பை 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை எந்த விதத்திலும் தடை செய்யவில்லை. இதனால் 2024 அதிபர் தேர்தலில் அவரால் வழக்கம் போலக் களமிறங்க முடியும்.

தடை இல்லை
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதை எதுவும் தடுக்க முடியாது. தண்டனை அறிவிக்கப்பட்டு அவர் சிறை சென்றாலும் கூட அவரால் சிறையில் இருந்து போட்டியிட முடியும். Eugene V. Debs (1920), Lydon LaRouche (1992), Keith Judd (2012) ஆகியோர் கடந்த காலங்களில் சிறையில் இருந்தபடியே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். ஆனால், சிறையில் இருக்கும் ஒருவருக்குக் குடியரசு கட்சி போட்டியிடும் வாய்ப்பை தருமா என்பதே இங்குக் கேள்வி.

டிரம்பிற்கு என்ன ஆகும்
டிரம்ப் சிறையில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் அவரது ஆதரவாளர்கள் அவரை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. சொல்லப்போனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மீண்டும் அவர் மீடியோ லைம்லெட்டிற்கு வர உதவியுள்ளது. இப்போது அங்குள்ள அனைத்து ஊடகங்களும் டிரம்ப் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறது. இது அவரது தேர்தல் பிரசாரத்திற்கு உதவவும் வாய்ப்பிருக்கிறது. அதேநேரம் குடியரசு கட்சியில் இருந்து அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட விரும்பும் மற்றவர்கள் டிரம்பை கடுமையாகச் சாடி வருகின்றனர். இப்படியொரு குற்றச்சாட்டிற்கு ஆளான ஒருவருக்குப் போட்டியிட வாய்ப்பு தரக் கூடாது என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது. இதில் என்ன நடக்கும் என்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications