தப்பிக்கவே முடியாது.. அளவுக்கு மீறி கடன் கொடுத்து 42 நாடுகளை அடிமையாக்கிய சீனா.. திட்டம் என்ன?
வாஷிங்டன் : பட்டுப்பாதை அல்லது பொருளாதார பாதை என்று அழைக்கப்படும் திட்டத்தின் மூலம் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் உள்பட சுமார் 42 நாடுகளுக்கு கடனுக்கு மேல் கடன் வழங்கி அந்த நாடுகளை சீனா அடிமையாக்கி உள்ளது ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video
அமெரிக்காவில் உள்ள வில்லியம் அண்ட் மேரி கல்லூரி் வெளியிட்ட அறிவிப்பில், "உதவி புள்ளி விவரம்: பொருளாதார பாதை திட்ட செலவு" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
சீனா தனது எல்லையை மறைமுகமாக விரிவுபடுத்த நோக்கத்தில் பொருளாதார பாதை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், பல்வேறு நாடுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவி செய்வதாக கூறி, பல ஆயிரம் கோடி கடன் மட்டுமே வழங்கி வருகிறது.

எவ்வளவு கடன்
இத்திட்டத்தின் கீழ் 165 நாடுகளில் பட்டுப்பாதை திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது. சீனா செயல்படுத்திய 13,427 மேம்பாட்டு திட்டங்களில், 35 சதவீத திட்டங்களில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த திட்டங்களின் மொத்த செலவு ரூ.62 லட்சத்து 38 ஆயிரத்து 200 கோடி என்று சொல்லப்படுகிறது.

கடன் சுமை
இந்த திட்டங்களில் தொழில் துறை விதிமீறல்கள் நடந்துள்ளன. சுற்றுச்சூழல் சிக்கல்கள் அதிகமாக இருந்திருக்கிறது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் சீனா சந்திக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் சீன பட்டுப்பாதை திட்டத்தின் கீழ், கடனுக்கு மேல் கடன் வழங்கி 42 நாடுகளை, தன்னிடம் இருந்து மீறி செல்ல முடியாத வகையில் கடன் சுமையில் சிக்க வைத்திருக்கிறது. இந்த நாடுகளின் கட்டமைப்பிற்கு உதவுவதாக கூறி, அவற்றை கடனாளியாக்குவதே சீனா குறிக்கோளாக கொண்டுசெயல்பட்டு உள்ளது.

சீனா பலத்த கடன்
அதாவது குறிப்பிட்ட சில நாடுகள் சீனாவுக்கு வழங்க வேண்டிய கடன், அந்நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 10 சதவீதம் அதிகமாக உள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள். கடன் வாங்கிய நாடுகளிடம் இருந்து கடனுக்கும் அதிகமான பிணையை வாங்கி இருக்கிறது. இதன் மூலம் சீனா பலத்த கடன் பாதுகாப்பை உருவாக்கியுள்ளது.

சீனாவின் திட்டம்
ஏன் இப்படி சீனா கடன் வழங்கியது. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், தனது நாட்டில் போதிய அளவு இல்லாத வளங்களை சரிக்கட்டவும் முதலீட்டு வருமானமாக டாலர், யூரோக்களை பெற்று அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்தவும் இதை செய்திருக்கிறது.ஊழலில் சிக்கி தவிக்கும் உலக பணக்கார நாடுகளுக்கு நாணய மதிப்பிலான கடன் வழங்கும் ஏற்பாட்டை செய்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வழித்தடம்
ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது ஒரு வளம் பெரிய அளவில் இருக்கும். உதாராணத்திற்கு ஈராக்கில் பெட்ரோல், உலகிற்கே கடல் வணிகத்தை கொண்டும் முக்கிய வழித்தடமான இலங்கையின் துறைமுகம், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சுரங்க வளங்கள் இவற்றை காலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று விரும்பி அந்த நாடுகளை சீனா கடனாளி ஆக்கி உள்ளது.

இந்தியா எவ்வளவு
சீனாவிடம் யாரெல்லாம் அதிக கடன் வாங்கி உள்ளார்கள். இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் போன்றவை சீனாவிடம் அதிகளவில் கடன் வாங்கி சிக்கி உள்ள நாடுகளில் இடம் பெற்றுள்ளன. சீனாவிடம் இருந்து 2000ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை மிக அதிகளவில் கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 23வது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா கோபம்
ஈராக் 59,200 கோடி, வட கொரியா 53,058 கோடி, எத்தியோப்பியா 48,618 கோடி, ரஷ்யா 11,23,320 கோடி, வெனிசுலா 6,06,504 கோடி,
அங்கோலா 3,73,478 கோடி, இந்தியா 65,564 கோடி கடன் வாங்கி உள்ளன. சீனா கடன் கொடுத்து உலக நாடுகளை தனது அடிமையாக்க மாற்றுவதை பார்த்து கோபம் அடைந்துள்ள அமெரிக்கா, பல்வேறு நாடுகளுடன் பேசி வருகிறது. சீனாவிற்கு எதிரான நாடுகளை ஒன்று சேர்த்துக்கொண்டு குவாட் அமைப்பை உருவாக்கி செயல் திட்டங்களை திட்டி வருகிறது. இதனால் உலக வல்லரசுகளான அமெரிக்கா சீனா இடையே வர்த்தக ரீதியாக பெரும் போட்டி காணப்படுகிறது.
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications