ம்ஹூம்.. நான் மாஸ்க் போட மாட்டேன்.. ஆனா நீங்க எல்லாரும் போடணும்.. விதண்டாவாத டிரம்ப்பின் பிடிவாதம்!
தான் மாஸ்க் அணிய மாட்டேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்
வாஷிங்டன்: "ம்ஹூம்.. நான் மாஸ்க் போட மாட்டேன்... அதை போட்டுக்கிட்டால், என் ஆபீசுக்கு அதிபர்கள், பிரதமர்கள், இளவரசிகள், இளவரசர்கள் வந்தால் எப்படி வரவேற்க முடியும்? அதனால மாஸ்க் போட மாட்டேன்" என்று பிடிவாதம் காட்டுகிறார் டிரம்ப்.. அதே சமயம் பிளான் செய்தபடி தேர்தலை நடத்தி காட்டுவேன் என்றும் கெத்தாக சொல்கிறார்.
Recommended Video
அதிபர் டிரம்பை இன்னும்கூட யாராலும் சரியாக புரிந்து கொள்ள முடிவதில்லை.. அவருக்கு எதிரான கருத்தை ஏதாவது சொன்னால் காதில் வாங்கி கொள்ளவே மாட்டார்.. "ஆமாம் சாமி" போடும் அதிகாரிகளையே தன்னுடன் வைத்திருப்பாரே தவிர, விஷயம் தெரிந்தவர்கள் இவருடன் இருக்க மாட்டார்கள்!
சமீப நாட்களாக, வல்லரசு நாடான அமெரிக்காவில் தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகிறார்கள்.. இதற்கு நடுவில் தனக்கு கொரோனா இருக்கிறதா என்று ஒன்றுக்கு 2 முறை போய் டெஸ்ட் செய்து பார்த்து கொண்டார் டிரம்ப்.. பிறகு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்ததாக எல்லாரிடமும் சொல்லி கொண்டே இருந்தார்.

வியப்பு
அமெரிக்காவில் உயிரிழப்பை ஏன் இவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று பலரும் வியப்புடன் பார்த்து வரும் சமயத்தில் 2 விஷயங்களில் அதிபர் உறுதியாக இருந்தார்.. ஒன்று தங்களுடைய பொருளாதாரத்துக்கு எந்த கேடும் வந்துவிடக்கூடாது, இன்னொன்று எக்காரணத்தை கொண்டும் அதிபர் தேர்தல் தள்ளி போய்விடக்கூடாது என்பதுதான்!

அதிபர் தேர்தல்
இதற்காக கொத்து கொத்தாக பலர் உயிரிழந்தபோதும் முன்னதாகவே, ஊரடங்கையும் அமல்படுத்தவில்லை.. தேர்தலையும் தள்ளிவைப்பது பற்றி யோசிக்கவும் இல்லை.. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று வல்லரசான அமெரிக்காவையும் ஆட்டிப்படைத்து வரும் நிலையிலும், திட்டமிட்டபடி நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வல்லுனர்கள்
இப்போது நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் வர உள்ளது.. 4 வருஷத்துக்கு ஒருமுறை இந்த தேர்தல் வரும்.. உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் அமெரிக்கா, அதிலிருந்து மீண்டு, பொருளாதார சரிவை சீர் செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் புட்டு புட்டு வைத்து விளக்க வருகின்றனர்.. அதனால் அதிபர் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகமும் நிலவி வந்தது.

அடையாள அட்டை
ஆனால் டிரம்ப் விடுவாரா.. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திட்டமிட்டபடி நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்று கறாராக சொல்லிவிட்டார்.. தேர்தலின்போது போலியான வாக்குகளை தடுக்க, வாக்காளர்கள் எல்லாரும் அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாஸ்க்
பிறகு மக்களுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார்.. வேகமாக வைரஸ் பரவி வருவதால், பொதுமக்கள் எல்லாரும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என்றும், மருத்துவ பணியாளர்களும் மாஸ்க்குகளை கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். எல்லாருக்கும் அட்வைஸ் தந்த டிரம்ப் தான் மட்டும் மாஸ்க் அணிந்து கொள்ள மாட்டேன் என்றும் உறுதியாக சொல்கிறார்.

அணிய மாட்டேன்
"மாஸ்க் அணிய போவதில்லை.. மாஸ்க் அணிய வேண்டும் என்று புதிய மருத்துவ ஆய்வுகள் பரிந்துரைத்தாலும், நான் மட்டும் மாஸ்க் அணிய மாட்டேன். என் ஆபீசிற்கு அதிபர்கள், பிரதமர்கள், சர்வாதிகாரிகள், இளவரசிகள், இளவரசர்கள் இப்படி யாராவது வருகை தரும்போது என்னால் மாஸ்க் அணிந்துகொண்டு, அவங்களை வரவேற்க முடியும்? அது முடியாது.. அதனால் மாஸ்க் அணிய போவதில்லை" என்றார் அதிபர்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications