உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா... 20,34,04,086 பேர் பாதிப்பு - 43,06,935 பேர் மரணம்
உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவால் 4,69,594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,34,04,086 பேராக உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 4,69,594 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,34,04,086 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 18,27,02,474 பேர் மீண்டுள்ளனர். மருத்துவமனைகளில் 16,394,677 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recommended Video
உலகம் மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன.
கடந்த சில வாரங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா ஒருபக்கம் பரவினாலும் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையை தருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவால் 4,69,594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,34,04,086 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3,95,391 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 18,27,02,474 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 7,895 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 43,06,935 பேராக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பு நடவடிக்கைகள்
அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 24,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 3,65,43,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து 2,98,59,049 பேர் மீண்டுள்ளனர். அங்கு கொரோனாவால் ஒரே நாளில் 128 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம்
கொரோனாவால் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 633,115 பேராக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசிகள்
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதிபர் ஜோ பிடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் அன் ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 35,06,27,188 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 19,43,46,486 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 16,62,03,176 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரேசில் நாட்டில் தீவிரம்
பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 13,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,01,65,672 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1,89,07,243 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் ஒரேநாளில் 388 பேர் மரணமடைந்துள்ளனர்
கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 563,470 பேராக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் பாதிப்பு அதிகரிப்பு
ரஷ்யாவில் கொரோனாவால் 22,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 64,47,750 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 57,55,507 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் அதிகபட்சமாக 787 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 164,881 பேராக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் 60 லட்சம் பேர்
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் மொத்தம் 63,05,158பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,69,362 பேராக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,429 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 39 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை ஒருநாள் பாதிப்பு 31 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

உலகம் முழுவதும் தீவிரம்
துருக்கி நாட்டில் 58 லட்சம் பேரும் அர்ஜென்டினாவில் 50 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொலம்பியா, ஸ்பெயின், இத்தாலி, ஈரான் நாடுகளிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு மொத்தம் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி, இந்தோனேசியா நாடுகளில் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications