உலகம் முழுவதும் 24,08,03,184 பேர் கொரோனாவால் பாதிப்பு - 49 லட்சம் பேர் மரணம்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 24,08,03,184 பேராக அதிகரித்துள்ளது. 49,04,101 பேர் மரணமடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் 4,35,544 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 240,803,184 பேராக அதிகரித்துள்ளது. 4,904,101 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் 23 கோடி பேர் சிக்கியுள்ளனர். 48 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

Covid 19 Update: Corona 240,803,184 affected in worldwide

உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் தினசரியும் கொரோனாவால் பலரும் பாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கொரோனா மூன்றாவது வீசத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் ஒரே நாளில் 435,544
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

392,847 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,80,76,826 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிப்பால் ஒரே நாளில் 6,958 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் மொத்தம் 49,04,101 பேர் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் 92,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 4,57,38,585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 3,40,52,687 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் 1,705 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,43,880பேராக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. பிரேசில் நாட்டில் கொரோனாவால் 15,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,16,27,476 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 44,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 83,61,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 1,38,379 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் கொரோனாவால் ஒரே நாளில் 32,196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 79,25,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 998 பேர் மரணமடைந்துள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+