50 கோடியை நெருங்கும் உலக கொரோனா பாதிப்பு.. தென் கொரியாவில் 90 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 519,682 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 499,639,605 பேராக அதிகரித்துள்ளது.

Covid 19 Update: Corona 49.83 crore people affected in worldwide 12-04-2022

உலக மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன.

கடந்த சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் டெல்டா போய் ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலை தீவிரமடைய காரணமாகியுள்ளது. அந்த வகையில் உலகில் ஒரே நாளில் கொரோனாவால் 519,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை 499,639,605 பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் கொரோனாவில் இருந்து 1,135,326 குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 449,412,342 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் ஒரே நாளில் 1,928 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,205,450 பேராக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தென்கொரியாவில் 248 பேர் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 20,917 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் 82,097,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 79,945,900 பேர் மீண்டுள்ளனர். 1,139,038 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 92 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,012,359 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 43,036,573 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 521,686 பேராகும். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 42,503,383.

பிரேசில் நாட்டில் மொத்தம் 30,161,205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பிரேசிலில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 29,076,974 ஆகும். பிரிட்டனில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியுள்ளது. ஜெர்மனியில் 2.2 கோடியை நெருங்குகிறது. ரஷ்யாவில் கொரோனாவால் 1.8 கோடி பேரும் பிரான்ஸில் 2.6 கோடிக்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஜெர்மனிக்கு அடுத்து தென்கொரியா உள்ளது. தென் கொரியாவில் 90,928 பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் துருக்கி 10-வது இடத்தில் உள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.53 கோடியை கடந்துள்ளது. கொரோனா முதலில் உருவான சீனாவில் மீண்டும் பரவல் ஆரம்பித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 1,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 165,577 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,638 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இத்தனை நாள் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. அங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+