திடீரென பாய்ந்த டிரான்! சிரியாவில் கதறி துடித்த அமெரிக்க வீரர்கள்.. 3 பேர் பலி, பலர் படுகாயம்! பகீர்
வாஷிங்டன்: மத்திய கிழக்கு பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் நடந்த டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த அக.7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடி கொடுத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடரும் நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்கள் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
3 அமெரிக்க வீரர்கள் பலி: இதற்கிடையே அப்படி அமெரிக்க ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் 25 வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. சிரியா எல்லைக்கு அருகே ஜோர்டான் நாட்டில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த டிரோன் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அமெரிக்க அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து ஜோர்டான் விளக்கமளித்துள்ளது. மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த ட்ரோன் தாக்குதல் தங்கள் எல்லையில் நடக்கவில்லை என்று ஜோர்டான் கூறியுள்ளது., அதேநேரம் தங்கள் நாட்டின் எல்லைக்கு அருகே உள்ள சிரியாவில் உள்ள ராணுவத் தளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் நடந்ததாக ஜோர்டான் தெரிவித்துள்ளது.
விளக்கம்: இது குறித்து ஜோர்டான் அரசு செய்தித் தொடர்பாளர் முஹன்னத் முபைதீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அமெரிக்கப் படைகளைக் குறிவைத்த தாக்குதல் ஜோர்டானில் நடக்கவில்லை... இது சிரியாவில் உள்ள அல்-டான்ஃப் என்ற தளத்தில் நடந்துள்ளது" என்று கூறினார்.
சிரியாவில் பயங்கரவாதிகளை ஒழிக்கச் சர்வதேச கூட்டணி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே அல்-டான்ஃப் பகுதியில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் நடத்தியதாகச் சாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாடியுள்ளார்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. சில அங்கு உள்ள பல்வேறு பயங்கரவாத குழுக்கள் தொடர்ச்சியாக டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் 97 முறை தாக்குதல்கள் நடந்துள்ளன. இருப்பினும், தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இதுவே முதல்முறை: அக். 7 தாக்குதலுக்குப் பிறகு இப்பகுதியில் அமெரிக்கத் தளங்கள் மீது ஏற்கனவே தாக்குதல்கள் நடந்துள்ள போதிலும், அதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது முதல்முறையாக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் உள்ளிட்ட அதிகாரிகள் தாக்குதல் அதிபர் பைடனுக்கு விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தத் தாக்குதல் குறித்த தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம், இது சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கும் தீவிர ஈரான் ஆதரவு போராளிக் குழுக்களால் நடத்தப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும். இந்தத் தாக்குதலுக்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இந்த அநியாயமான தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications