'மோசமான ஓடுதளம்' சூடானில் கடும் சவாலுக்கு மத்தியில் துணிச்சலாக செயல்பட்ட இந்திய விமானப்படை.. சபாஷ்!
வாஷிங்டன்: சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் மத்திய அரசு மீட்டு வருகிறது. சூடானில் இரவு நேரத்தில் தரையிறங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாத விமான நிலையத்தில் துணிச்சலாக இறங்கிய இந்திய விமானப்படை, இந்தியர்கள் 121 பேரை பத்திரமாக மீட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே ஆயுத சண்டை நடைபெற்று வருகிறது. அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் மோதலால் அப்பாவி பொதுமக்களும் உயிர் பலி ஆகின்றனர். இதுவரை 400- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அந்ந நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டு குடிமக்கள் வெளியேறி வருகின்றனர். அவர்களை சம்பந்தபட்ட நாடுகள் மீட்டு வருகின்றன. அந்த வகையில் சூடானில் வசித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும் ஆபரேஷ காவேரி என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த மீட்பு பணி 24 ஆம் தேதி தொடங்கியது.
விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே தலைநகர் கார்டூம் நகரில் தீவிரமாக சண்டை நடைபெற்று வருகிறது. எனவே அங்கிருந்து பேருந்துகள் மூலமாக இந்தியர்கள் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
பின்னர் விமானபப்டை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலமாக ஜெட்டா அழைத்து வரப்பட்டு சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுவரை சூடானில் சிக்கியிருந்த 2,400 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே மீட்பு பணியில் மிகவும் சவாலான பணியை இந்திய விமானப்படை மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வாடி சய்யித்னா விமான நிலையத்தில் இந்திய விமானப்படையின் C-130J விமானம் தரையிறங்கியுள்ளது. விமானம் தரையிறங்குவதற்கான எந்த வசதிகளும் இந்த விமான நிலையத்தில் இல்லாமல் இருந்துள்ளது. விளக்குகள் எதுவும் இன்றி இருளில் மூழ்கியிருந்ததோடு எரிபொருள் நிரப்பவும் வசதி இல்லாத இந்த விமான நிலையத்தில் இரவு நேரத்தில் பயன்படுத்தப்படும் நைட் விஷன் கண்ணாடிகளை கொண்டு விமானப்படை விமானத்தை விமானி தரையிறக்கி உள்ளார்.

விமானம் தரையிறங்கியதும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் விமானப்படை வீரர்கள் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் விறு விறுவென ஏற்றியுள்ளனர். பயணிகளில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார். அவரையும் பத்திரமாக விமானத்தில் ஏற்றியிருக்கின்றனர்.
விமானத்தின் என்ஜினை ஆஃப் செய்யாமல் ரன்னிங்கில் வைத்திருந்த விமான பயணிகள் மீட்கப்பட்டதும் நைட் விஷன் கண்ணாடிகளை பயன்படுத்தியே டேக் ஆஃப் செய்து இருக்கிறார். வாடி சய்யித்னா முதல் ஜெட்டா வரையிலான இந்த இரண்டை மணி நேர ஆபரேஷன் விமானப்படையின் துணிச்சலையும் சாதனையையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications