பரவும் புதிய நோய்.. கொசு கடியால் இவ்வளவு பெரிய ஆபத்தா! 3ல் ஒருவர் பலி.. தடுப்பூசி கூட இல்லையாம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இப்போதெல்லாம் புதிது புதிதாக நோய்கள் பரவி வருகிறது. இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் கூட ஏற்படுகிறது. அப்படிதான் இங்கு ஒருவருக்குச் சாதாரணமாகக் கொசு ஒன்று கடித்துள்ளது. அதில் மோசமான நோய்ப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அந்த நபர் 5 ஆண்டு போராட்டத்திற்கு பிறகும் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.

நம்ம உலகில் இப்போது திடீர் திடீரென புதிய புதிய நோய்ப் பாதிப்புகள் ஏற்படுகிறது. இவை எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறியும் முன்பே உயிரிழப்புகளை வரை ஏற்பட்டுவிடுகிறது. அப்படியொரு மோசமான மரணம் தான் இப்போது நடந்துள்ளது.

usa world

உயிரிழப்பு: கொசுக் கடி மூலம் பரவும் வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடல்நிலை மிக மோசமடைந்துள்ளது. இதற்காக அவர் 5 ஆண்டுகள் அவர் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து போராடியிருக்கிறார். இருப்பினும், அவரை காப்பாற்ற முடியவில்லையாம்.. இறுதியில் 5 ஆண்டு போராட்டத்திற்கு பிறகும் கொசுக் கடியால் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இதில் ஷாக் தகவல் என்னவென்றால் கொசுக்கடியால் பரவும் இந்த அரிய நோயால் பாதிக்கப்படுவோரில் கிட்டதட்ட 3ல் ஒருவர் உயிரிழந்துவிடுவாராம். அப்படியே போராடி உயிர் பிழைத்தாலும் கூட மற்றவர்களுக்கு நரம்பியல் கோளாறு உள்ளிட்ட மோசமான பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த வைரஸ் நேரடியாக மூளையைத் தான் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது: அமெரிக்காவின் கனெக்டிகட்டின் கோல்செஸ்டரைச் சேர்ந்த 49 வயதான நபர் ரிச்சர்ட் பவுல்ஸ்கி. இவர் கடந்த 2019இல் தனது வீட்டில் தோட்ட வேலைகளைச் செய்து வந்துள்ளார். அப்போது கொசு ஒன்று கடித்ததில் ஈஸ்டர்ன் ஈக்வைன் என்செபாலிடிஸ் (EEE) என்ற நோய் இவரைத் தாக்கியுள்ளது.

கொசு கடித்த சில நாட்களிலேயே அந்த நபருக்குக் கடுமையான ஒற்றைத் தலைவலி ஏற்பட்டுள்ளது. மேலும், மஞ்சள் கலரில் வாந்தி வந்துள்ளது. முதலில் மருத்துவர்களுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பல வித டெஸ்டகளை எடுத்துள்ளனர், சோதனைகளைச் செய்துள்ளனர். இருந்தாலும், அவருக்கு என்ன பாதிப்பு என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பல சோதனைகளுக்கு பிறகே அவருக்கு ஈஸ்டர்ன் ஈக்வைன் என்செபாலிடிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்து மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர்.

சோகம்: இதனால் கடந்த 5 ஆண்டுகள் அவர் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்துள்ளார். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் கடந்த திங்கள்கிழமை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாதாரண கொசுக் கடியால் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்படும் என்பதை அவரது குடும்பத்தினரால் ஏற்கவே முடியவில்லை. இது குறித்து அவரது மகள் கூறுகையில், "கண்ணிமைக்கும் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று எனது தந்தை விளையாட்டாகக் கூறுவார். கிட்டதட்ட அவருக்கும் அப்படி தான் நடந்து இருக்கிறது. இதை எங்களால் ஏற்கவே முடியவில்லை" என்றார்.

இஇஇ எனப்படும் இந்த ஈஸ்டர்ன் ஈக்வைன் என்செபாலிடிஸ் என்ற இந்த அரிய வகை நோய் கொசுக் கடி மூலம் மக்களுக்குப் பரவுகிறது. இது மிகவும் அரிதான அதேநேரம் ஆபத்தான ஒரு வகை நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்படும் 30% பேர் உயிரிழக்கிறார்கள். இதில் இருந்து தப்பிப்போருக்கும் கூட நரம்பியல் பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கிறது.. காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

தடுப்பூசி இல்லை: ஈஸ்டர்ன் எக்வைன் என்செபாலிடிஸை என்ற இந்த நோய்க்கு இதுவரை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.. அதேபோல இதற்கு மருந்துகளும் எதுவும் இல்லை. இந்த ஈஸ்டர்ன் எக்வைன் என்செபாலிடிஸ் வைரஸ் பரவும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கொசு கடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+