வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

படபடவென பட்டாசு வெடிக்குது..அமெரிக்காவிலும் களைகட்டிய தீபாவளி! ஒன்றாக சேர்ந்து மகிழ்ந்த இந்தியர்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : அமெரிக்காவில் இன்று காலை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் ஆலயத்தில் வழிபாடு செய்த அமெரிக்காவாழ் இந்தியர்கள் ஒரே இடத்தில் பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ந்தனர்.

தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நேற்று உலகம் எங்கும் கொண்டாடப்பட்டது. புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்ட மக்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்தியாவைப் போலவே உலகத்தின் பல்வேறு பகுதிகளில் தீபாவளிப் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ், வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் ஒன்றாக இணைந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பறிமாறிக் கொண்டனர்.

பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்! கார்கில் சென்ற பிரதமர் மோடி! தொடரும் 9வது ஆண்டு!பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்! கார்கில் சென்ற பிரதமர் மோடி! தொடரும் 9வது ஆண்டு!

தீபாவளிப் பண்டிகை

தீபாவளிப் பண்டிகை

அமெரிக்காவில் இன்று காலை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் ஆலயத்தில் வழிபாடு செய்த அமெரிக்காவாழ் இந்தியர்கள் ஒரே இடத்தில் பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நம் நாட்டில் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், 12 மணி நேரம் நேர வித்தியாசம் உள்ள அமெரிக்காவில் இன்று கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் உற்சாகம்

அமெரிக்காவில் உற்சாகம்

காலையில் வீடுகளில் பூஜை செய்து தீபாவளி படையலிடும் இந்தியர்கள் மாலை வேளையில் அங்கு உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து தொடர்ந்து ஒரே இடத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். டெலவேர் மாநிலத்தில் உள்ள மகாலட்சுமி ஆலயத்தில் அங்குள்ள இந்தியர்கள் கூட்டமாக சென்று சுவாமி தரிசனம் செய்து கோயில் அருகே உள்ள மைதானத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

உள்ளூர் விடுமுறை

உள்ளூர் விடுமுறை

டெலவேர், நியூஜெர்சி, பென்சில்வேனியா, நியூயார்க் ஆகிய மாகாணங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அவர்கள் அனைவரும் உற்சாகமாக தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அதிபரும் உற்சாகம்

அதிபரும் உற்சாகம்

அதிபர் ஜோ பைடனும் தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் கலந்து கொண்டனர். குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கி வைத்த ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக தீபாவளி பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் அமெரிக்க கலாச்சாரத்தின் மகிழ்ச்சிக்குரிய விழாவாக தீபாவளி இருப்பதாகவும் அவர் கூறினார்.

English summary
As the Diwali festival was celebrated in the United States this morning, like India, the American Indians who worshiped in the temple in the United States enjoyed lighting crackers at the same place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X