நிதி உதவி அளித்து இந்திய தேர்தலில் தலையிட முயற்சியா? ஜோ பைடன் அரசு மீது டிரம்ப் பகீர் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: இந்தியாவில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர் நிதியுதவி நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து பேசிய டிரம்ப், நிதி உதவி மூலம் இந்திய தேர்தலில் தலையிட ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து இருக்கலாம் என யூகிக்கிறேன் எனப் பேசியிருக்கிறார். டிரம்பின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இந்தியாவில் தேர்தலில் தலையிட முயன்றதாக சூசகமாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளர். அரசின் செயல் திறன் துறை (DOGE) இந்தியாவுக்கு அளித்து வந்த 21 மில்லியன் நிதியை நிறுத்த உத்தரவிட்டுள்ளதை நியாயப்படுத்தி பேசிய டிரம்ப் இவ்வாறு பேசினார்.

மியாமி மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப் கூறியதாவது:- இந்தியாவில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க நாம் ஏன் 21 மில்லியன் கொடுக்க வேண்டும். வேறு யாரோ தேர்வு ஆக வேண்டும் என்று ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து இருக்கலாம் என யூகிக்கிறேன். இந்திய அரசிடம் நாம் இதை சொல்ல வேண்டும்" என்றார்.
முன்னதாக, அமெரிக்க அரசின் செயல்திறன் துறை என்கிற புதிய உருவாக்கிய டிரம்ப் அதன் தலைவராக எலான் மஸ்கை நியமித்தார். அரசு நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வீண் செலவினங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவை புதிய துறையின் பணியாகும்.
அதன்படி எலான் மஸ்க் தலைமையிலான அந்த புதிய துறை செலவினங்களை குறைப்பதாக கூறி பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை நிறுத்தி வந்தது.. அந்த வகையில் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (சுமார் ரூ.182 கோடி) நிதியுதவியை நிறுத்துவதாக அரசாங்க செயல்திறன் துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் முடிந்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியானது. இதற்கான உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அப்போதும் டிரம்ப் தனது அரசின் உத்தரவை நியாயப்படுத்தியிருந்தார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்துவது தொடர்பான நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் இந்தியாவுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:- "இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் நிதியை நாம் ஏன் ஒதுக்க வேண்டும். இந்தியவிடம் அதிக பணம் உள்ளது. அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த வரி விதிப்பால் நாம் தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம். இந்திய பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதற்காக வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டுமா? " எனப் பேசினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications