Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆணுறைகள்.." டிரம்ப் போட்ட வினோதமான உத்தரவு.. இதை நிஜமா யாருமே எதிர்பார்க்கல தான்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வெளிநாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியுதவிகளை முடக்கி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், இதன் காரணமாகக் காசா பகுதிக்கு ஆணுறை வழங்கும் திட்டங்கள் முடங்கியுள்ளது. காசாவில் ஆணுறை வழங்க மட்டும் அமெரிக்கா 50 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 432 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில், அவர் தொடர்ச்சியாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற இது உதவும் என அவர் கூறி வருகிறார்.

donald trump

ஆணுறைகள் கூடாது:

இதற்கிடையே டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இப்போது காசாவுக்கு செல்லும் பல மில்லியன் டாலர் மதிப்புடைய நிதியுதவிகளை நிறுத்தியுள்ளது. காசாவில் ஆணுறைகள் வழங்குவது உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கான நிதியுதவிகளை முடக்கி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வினோதமான உத்தரவு:

அதாவது உலக நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வரும் அனைத்து மானியங்கள், கடன்கள் மற்றும் பெடரல் அரசின் உதவி திட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும் வரை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், காசாவுக்கு வழங்கப்படும் உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. டிரம்ப் உத்தரவில் இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக எந்தவொரு அதிபரும் இதுபோல ஒட்டுமொத்தமாக தடை விதிக்க மாட்டார். ஆனால், டிரம்ப் இரு நாடுகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துவிட்டு மொத்தமாக தடை விதித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையில், "அரசு செலவினங்களைக் குறைக்கும் DOGE துறை தேவையான ஆய்வுகளை நடத்தி வந்தது. அதில் தான் காசாவில் ஆணுறைகளை வழங்க 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 432 கோடி ரூபாய்) அனுப்பப்படுவது தெரிய வந்தது.

அபத்தமான திட்டம்:

அமெரிக்க மக்களின் பணத்தை வீணடிக்கும் அபத்தமான திட்டம் இதுவாகும். இதற்குப் போகும் நிதியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். வேறு நல்ல திட்டங்களுக்கு இந்த நிதியை அளிக்க முடிவு செய்வோம். ஒட்டுமொத்தமாக நாங்கள் அனைத்து நிதியுதவிகளையும் நிறுத்தவில்லை. அமெரிக்க மக்களுக்கு எது நல்லது எனப் பார்த்து அந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய திட்டங்களுக்கு நிதியளிக்க முடிவு செய்து வருகிறோம்" என்றார்.

தெற்கு இஸ்ரேலில் உள்ள பள்ளிக்கூடங்கள், விவசாய நிலங்கள், நெடுஞ்சாலைகள் ஆகிய பகுதிகளுக்கு ஐஇடி வெடிகுண்டுகளை அனுப்ப ஹமாஸ் படை ஆணுறைகளைப் பயன்படுத்தியதாகக் கடந்த 2020ம் ஆண்டு ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் உத்தரவுக்கு என்ன காரணம்:

அதாவது ஹமாஸ் படை காசாவில் இந்த ஐஇடி வெடிகுண்டுகளை ரெடி செய்யும். ஆணுறைகளை பலூன்கள் போல ஹைட்ரஜன் வாயுவை நிரப்பி, அதில் ஐஇடி வெடிகுண்டுகளைக் கட்டி ஹமாஸ் படை பறக்கவிடும். காற்றின் போக்கில் பறந்து செல்லும் இந்த வெடிகுண்டுகள் இஸ்ரேல் பகுதியில் முக்கிய இடங்களில் விழுந்த பிறகு, ஹமாஸ் படை அதை வெடிக்கச் செய்வதாக ஜெருசலேம் போஸ்ட் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் இதுபோல தொடர்ந்து செயல்பட்டு வருவது நீண்ட கால நோக்கில் சர்வதேச உறவுகள் மற்றும் வணிகத்தைப் பாதிக்கலாம் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதுபோல சர்வதேச வணிகம் பாதிக்கப்பட்டால் அது பொதுமக்களையே மிக மோசமாகப் பாதிக்கும் என்றும் இதனால் டிரம்ப் பார்த்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+