"பிரச்சனையை பேசி தீர்க்கலாம்!" இந்தியா பற்றி கேட்டதும் சட்டென யூடர்ன் போட்ட டிரம்ப் அரசு! ட்விஸ்ட்
வாஷிங்டன்: டிரம்ப் வரி காரணமாக இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு வர்த்தகமும் மோசமாகச் சிக்கலைச் சந்தித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவும் இந்தியாவும் விரைவில் தங்கள் வர்த்தகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று அமெரிக்க டிரஸ்சரி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகின் இரு பெரு நாடுகளும் தங்கள் பிரச்சனையைப் பேசி தீர்க்கும் எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இஷ்டத்திற்கு வரிகளை விதித்து வருவது அனைவருக்கும் தெரியும். அப்படித் தான் அவர் இப்போது இந்தியா மீது 50% வரிகளை விதித்துள்ளார். டிரம்ப்பின் இந்த வரியால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவும் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் போகும் ஏற்றுமதி 40% வரை குறையும் என அஞ்சப்படுகிறது.

டோனை மாற்றிய அமெரிக்கா
அதேநேரம் மறுபுறம் ரஷ்யா, சீனா நாடுகளுடன் இந்தியா தனது உறவை மீண்டும் புதுப்பித்து இருக்கிறது. உலக அரசியலில் நடக்கும் இந்த மாற்றத்தை அமெரிக்கா உற்றுக் கவனித்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவை இத்தனை காலம் கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்கா, இப்போது தனது டோனை மாற்றி இருக்கிறது.
அமெரிக்காவும் இந்தியாவும் விரைவில் தங்கள் வர்த்தகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று நம்புவதாக அமெரிக்க டிரஸ்சரி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இந்த இரு பெரிய நாடுகளும் இந்தச் சிக்கலைப் பேசி தீர்க்கும்.. அதேநேரம் இந்தியா இன்னும் ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தியாவின் இந்தச் செயலே உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு நிதியளிக்கிறது" என்றார்.
சீன டிராகன் & இந்திய யானை
சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர். அது தொடர்பான கேள்விக்கு, "இது வழக்கமாக நடக்கும் சந்திப்பு தான். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் சந்தித்துள்ளனர். இது வழக்கமாக நடக்கும் ஒரு மீட்டிங் தான். இதில் பெரிய விஷயம் எதுவும் இல்லை.. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா. எனவே, எங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் உறவு ரஷ்யா, சீனாவை விட நெருக்கமானவை" என்றார்.
வரிக்கு உண்மையில் என்ன காரணம்
இப்போது இந்தியாவுக்கு டிரம்ப் தரப்பு 50% வரிகளை விதித்துள்ளன. ஆசிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வரி இதுவாகும். ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவது மட்டுமே இந்தியாவுக்கு வரி விதிக்கக் காரணம் இல்லை என்பதை டிரம்ப் தரப்பு அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தியா- அமெரிக்க இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததும் கூட வரிக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக ஸ்காட் பெசென்ட் கூறுகையில், "இந்த இரு பெரிய நாடுகளும் இறுதியில் பிரச்சனையைத் தீர்க்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், ரஷ்ய எண்ணெய்யை வாங்கி, அதை மறுவிற்பனை செய்து, உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு நிதியுதவி அளிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்ய உக்ரைன் போர்
ரஷ்ய உக்ரைன் போர் குறித்துப் பேசிய அவர், "அலாஸ்காவில் புதின்- டிரம்ப் சந்திப்பு நடந்தது. அதன் பிறகு தாக்குதல் குறையும்.. போர் மெல்ல முடிவுக்கு வரும் என்றே பலரும் நினைத்தோம். ஆனால், புதின் அதற்கு நேர்மாறாக செயல்பட்டு இருக்கிறார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு குண்டுவீச்சு தாக்குதல்களை அவர் அதிகரித்துள்ளார். டிரம்ப்பிற்கு இப்போது அனைத்து ஆப்ஷன்களும் உள்ளன. போரைத் தடுக்க அவர் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பார்" என்றார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications