‛‛உல்லாசம்’’.. டொனால்ட் ட்ரம்ப்புடன் ஆபாச நடிகை ஸ்டோர்மி உறவு வைத்தது எப்படி? வெளியான பரபர தகவல்
வாஷிங்டன்: ஆபாச நடிகையுடன் உல்லாசமாக இருந்ததாகவும், இதுபற்றி வெளியே கூறாமல் இருக்க ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியலுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரசார நிதியை கொடுத்த குற்றச்சாட்டு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் டொனால்ட் ட்ரம்பை அலறவிடும் ஆபாச நடிகை ஸ்டோர்மி யார்? அவருக்கும், டொனால்ட் ட்ரம்புக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். குடியரசு கட்சியை சேர்ந்த இவர் 2016 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்தார். அதன்பிறகு நடந்த அதிபர் தேர்தலில் ஜோபைடனிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்கிடையே தான் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.

ஆபாச நடிகைக்கு பணம்
அதாவது டொனால்ட் ட்ரம்ப் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல் என்பவருடன் உல்லாசமாக இருந்ததாகவும், இதுபற்றி வெளியில் கூறாமல் இருக்க கடந்த 2016 அதிபர் தேர்தலுக்கு முன்பாக அவருக்கு பிரசார நிதியில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் பணம் கொடுத்ததாகவும் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இந்த பண பரிமாற்றம் தான் தற்போது டொனால்ட் ட்ரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இதனை டொனால்ட் ட்ரம்ப் முற்றிலுமாக மறுத்துள்ளார். ஆனாலும் அவரை சூழ்ந்த பிரச்சனை மட்டும் இன்னும் முடிவுக்கே வரவில்லை.

விரைவில் கைது
அதாவது டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தான் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாகவும், விரைவில் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இதை முன்கூட்டியே உணர்ந்த டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 21ல் தான் கைது செய்யப்படலாம். ஆதரவாளர்கள் போராட்டத்தை தொடங்க வேண்டும் என கூறினார். இருப்பினும் டொனால்ட் ட்ரம்ப் அன்றைய தினம் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் கைது நடவடிக்கை விரைவில் இருக்கும் என கூறப்படுகிறது.

யார் இந்த ஆபாச நடிகை?
இதுதான் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் எதிர்காலத்தை ஒட்டுமொத்தமாக முடக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல் பற்றிய பல்வேறு விஷயங்களும் வெளியாகி வருகின்றன. டொனால்ட் ட்ரம்ப்புக்கும், அவருக்கும் இடையேயான பழக்கம், உறவு பற்றிய விபரங்களும் வெளியாகி இருக்கின்றன. இதுபற்றிய விபரம் வருமாறு: அமெரிக்காவின் லூசியானாவின் பேன் ரூஜ் நகரை சேர்ந்தவர் ஸ்டோர்மி டேனியல்ஸ். இவருக்கு வயது 44. இவரது உண்மையான பெயர் ஸ்டெபானி கிரேகாரி கிளிபோர்ட்.

பெயர் மாற்றம் ஏன்?
இவர் ஏராளமான ஆபாசபடங்களில் நடித்துள்ளார். இந்த படங்களுக்காக தான் அவர் தனது பெயரை ஸ்ட்ராமி டேனியல்ஸ் என மாற்றி உள்ளார். அமெரிக்க அதிபராவதற்கு முன்பு 2006, 2007 காலத்தில் ஸ்டோர்மியை சுற்றி வந்த டொனால்ட் ட்ரம்ப் அதன்பிறகு அவரை கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில் தான் 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட தயாரான போது ஸ்டோர்மி உடனான உறவு விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.

2006ல் நடந்த உறவு
அதாவது கடந்த 2006ல் டொனால்ட் ட்ரம்ப், மெலனியாவை திருமணம் செய்தார். இது அவரது 3வது மனைவியாகும். இந்த சமயத்தில் தான் 2006 ஜூலையில் கலிபோர்னியானியாவின் லேக் தஹோவில் நடந்த கோல்ப் விளையாட்டின் போது ட்ரம்புடன் ஸ்டோர்மிக்கு அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து அவர் தன்னை இரவு உணவுக்கு சொந்த ஓட்டலுக்கு அழைத்தார். அடுத்த ஓராண்டில் ஸ்ட்ராமி டேனியல்சுடன் டொனால்ட் ட்ரம்ப் உறவு வைத்ததாக ஸ்ட்ராமி கூறியுள்ளார். இந்த உடலுறவு என்பது இருவரின் விருப்பத்தின் பேரிலேயே நடந்துள்ளது.

புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்
அதாவது ட்ரம்ப்பின் ரியாலிட்டி ஷோவான ‛தி அப்ரண்டீஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்படி டொனால்ட் ட்ரம்ப் கேட்டார். இந்த வேளையில் நீங்கள் என் மகளை நினைவுப்படுத்துகிறீர்கள். அழகாக உள்ளீர்கள். நான் உங்களை விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் 2007 ல் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெவர்லி ஹில்ஸ் ஓட்டலில் ட்ரம்ப் அழைப்பின்பேரில் ஸ்டோர்மி சந்தித்துள்ளார். இந்த வேளையில் டொனால்ட் ட்ரம்ப் உறவுக்கு அழைத்தபோது ஸ்டார்மி ஒப்புக்கொள்ளவில்லை.

பணப்பரிமாற்றம்
இதற்கிடையே தான் கடந்த 2016ல் அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் பிரசாரம் செய்தார். அப்போது தான் இருவருக்கும் இடையேயான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. ஸ்டோர்மியுடன் இருந்த உறவால் அதிபர் தேர்தலில் வெற்றி பறிபோகும் சூழல் டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்டது. இதனால்இருவருக்கும் இடையேயான உறவு பற்றி வெளியே சொல்லாமல் இருக்க ஸ்டார்மியிடம் பேரம் பேசி பணத்தை வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ஸ்டார்மியின் வழக்கறிஞர் கீத் டேவிட்சனிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணப்பரிமாற்றம் தான் தற்போது டொனால்ட் ட்ரம்புக்கு சிக்கலை கொடுத்துள்ளது. முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் உடனான உறவு பற்றி ஸ்டோர்மி சிபிஎஸ் நிகழ்ச்சியில் கடந்த 2018 ல் கூறி பரபரப்பபை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications