கலக்கத்தில் இந்தியர்கள்.. ரூ.88 லட்சத்தை எடுத்து வை.. "H-1B" விசாவுக்கு டிரம்ப் அனுப்பும் நோட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய ஹெச்-1பி விசா விதிகளால் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்குச் சம்பந்தமே இல்லாமல் பல்வேறு நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக டிரம்ப் அரசு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. இந்த குழப்பத்தால் அங்குள்ள வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் தான் ஹெச்-1பி விசா கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தினார். ஹெச்-1பி விசாக்கள் தவறாக பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் அதன் கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்துவதாகச் சொல்லி டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

Donald Trump Imposes 100K H-1B Visa Fee Demands Confusion RFEs and Lawsuits Hit Indian Workers

குழப்பம்

இதற்கிடையே H-1B விசா விண்ணப்பங்களுக்கு அமெரிக்கா ஒரு லட்சம் டாலரை கட்டணமாக வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இது நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நடுவே குழப்பத்தையும் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது. பொதுவாக, H-1B விசாக்களில் சுமார் 70% இந்தியர்களுக்கு வழங்கப்படும் என்பதால் இந்தியர்களே அதிகம் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

சில குறிப்பிட்ட நிறுவனங்கள் இந்தத் தொகையைக் கட்ட தேவையில்லை என்ற போதிலும் அமெரிக்கக் குடியுரிமை துறை அவர்களுக்கும் சேர்த்தே நோட்டீஸ்களை அனுப்பி வருகிறதாம். விசா விண்ணப்பம் குறித்து முடிவெடுப்பதற்கு முன், கூடுதல் ஆவணங்கள் அல்லது விளக்கங்களைக் கோரும் இந்த நோட்டீஸுக்கு அமெரிக்காவில் RFE என்ற பெயர். அங்கு பல நிறுவனங்களுக்கு இந்த RFE அனுப்பப்பட்டுள்ளதாம்.

தெளிவு இல்லை

அமெரிக்காவில் முதலில் ஹெச்-1பி விசாவில் சென்று, சீக்கிரமே திரும்பிவிட்டால்.. பிறகு அந்த பயன்படுத்தாத நேரத்தை வைத்து மீண்டும் அமெரிக்கா செல்ல முடியும். இதை recapture time என்பார்கள். இந்தப் பிரிவின் கீழ் அமெரிக்கா சென்றவர்களுக்கும் கூட இப்போது RFEs அனுப்பப்படுகின்றன. டிரம்ப் கொண்டு வந்த இந்த விதியிலேயே பல ஓட்டைகள் இருப்பதாகவும் இதன் காரணமாகவே குழப்பம் ஏற்படுவதாகவும் அங்குள்ள வழக்கறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நோட்டீஸ்

டிரம்ப் உத்தரவின்படி புதிதாக ஒருவர் விசா கோரி விண்ணப்பிக்கும்போது மட்டுமே ஒரு லட்சம் டாலரை செலுத்த வேண்டும். இருப்பினும், விசா கோரி விண்ணப்பிக்காத நேரம் நிறுவனங்கள் இந்தத் தொகையைச் செலுத்தத் தேவையில்லை.. அப்படியிருக்கும்போது குடியுரிமை துறை நேரடியாக நிறுவனங்களிடம் விசா கோருவது சட்ட மீறலாக இருக்கலாம் என்று அங்குள்ள வல்லுநர்கள் கருதுகிறார்கள்

எனவே, இந்தக் கட்டணங்கள் தங்களுக்குப் பொருந்தாது என RFE பெற்றுள்ள நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒருவேளை அந்தப் பதிலைக் குடியுரிமை துறை நிராகரித்தாலும் கூட நீதிமன்றத்திற்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இந்த புதிய விதியை எதிர்த்து ஏற்கனவே பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் அங்குள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிறுவனங்கள்

இந்த விசா கட்டண உயர்வால் அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களும் ஆள் எடுக்கும் முறையையே மாற்றுவது குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளனர். சில நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை எடுப்பதையே முழுமையாக நிறுத்தி வைத்துள்ளன. சில நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வருவதைத் தவிர்த்துவிட்டு, வேலைகளை நேரடியாக வெளிநாடுகளுக்கு மாற்றிவிடுகின்றன. வேறு சில நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பதிலாக அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க பயிற்சி கொடுக்க ஆரம்பித்துள்ளன.

இந்த நோட்டீஸ் ஒரு பக்கம் இருக்க, அமெரிக்கத் தொழிலாளர் துறை "புராஜெக்ட் ஃபயர்வாலை" (Project Firewall) தொடங்கியுள்ளது. H-1B விசா திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகச் சொல்லி 175 கேஸ்களை அமெரிக்கத் தொழிலாளர் துறை விசாரித்து வருகிறது. அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதே தங்கள் நோக்கம் என அமெரிக்கத் தொழிலாளர் துறை அமைச்சர் லோரி சாவேஸ்-டெரிமர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+