டிரம்ப் கட்சி படுதோல்வி.. அமெரிக்க தேர்தலில் விழுந்த மரண அடி.. காத்திருந்த பேரதிர்ச்சி!
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மேயர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மம்தானி வெற்றி பெற்றார். அவர் சுமார் 50%க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் மிக முக்கியமான நகரமாக நியூயார்க். அமெரிக்காவின் முதல் தலைநகராக இருந்தது இந்த நியூயார்க் தான்.. அமெரிக்காவின் முதல் தலைநகராக 1785 முதல் 1790 வரை நியூயார்க் தான் செயல்பட்டது. அதன் பிறகே அமெரிக்காவின் தலைநகராக வாஷிங்டன் மாற்றப்பட்டது. அதேநேரம் இப்போதும் அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக நியூயார்க் தான் உள்ளது.

நியூயார்க் மேயர் தேர்தல்
இந்தளவுக்கு முக்கியமான நகரமாக இருக்கும் நியூயார்க்கில் மேயரை தேர்வு செய்வதற்கான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் தொடக்கம் முதலே ஜனநாயகக் கட்சியின் மம்தானி தான் முன்னிலையில் இருந்தார்.
அதில் மம்தானி சுமார் 50.4% வாக்குகள், அதாவது சுமார் 10.36 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஆண்ட்ரூ குவோமோ 41%, அதாவது 8.54 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கர்டிஸ் ஸ்லிவா வெறும் 7%, அதாவது 1.4 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார்.
டிரம்ப் கட்சி படுதோல்வி
அதாவது அங்கு அதிபராக இருக்கும் டிரம்ப் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். அவரால் இரட்டை இலக்கில் கூட வாக்குகளைப் பெற முடியவில்லை. டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வியை அடைந்துள்ளதையே காட்டுகிறது. ட்ரம்பின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதையே இது காட்டுவதாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள். மேலும், டிரம்ப் மீது 51% முதல் 58% வரை மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவே புதிய சர்வேக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிலேயே இல்லை
அதேநேரம் இந்தத் தேர்தலில் மம்தானிக்கும் ஆண்ட்ரூ குவோமோக்கும் இடையே தான் தொடக்கம் முதலே போட்டி இருந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியிலேயே இல்லை. இதன் காரணமாகவே டிரம்ப் கூட தனது கட்சி வேட்பாளரை விட்டுவிட்டு ஆண்ட்ரூ குவோமோவுக்கு வாக்களிக்குமாறு வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார்.. இருப்பினும், அதையும் தாண்டியே மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.
காரணம்
மம்தானி வெற்றிக்கு அவர் முன்வைத்த சில வாக்குறுதிகள் முக்கிய காரணமாக இருக்கிறது. முதலில் அவர் அங்குள்ள பணக்காரர்களுக்கு அதிக வரியை விதிக்கப் போவதாகச் சொன்னார். அதேபோல உழைக்கும் வர்க்கத்தினர் பலன் பெறும் வகையில் இலவச பேருந்துகள், வீடுகளுக்கு வாடகையை உயர்த்த முடியாதவாறு கட்டுப்பாடு எனப் பல்வேறு வாக்குறுதிகளை அவர் முன்வைத்தார். இதுவே அவரது மிக பெரிய வெற்றிக்குக் காரணமாக இருந்தது.
அதேநேரம் மம்தானியை டிரம்ப் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் மம்தானி வென்றால் குறைந்தபட்ச நிதியைத் தவிரக் கூடுதல் நிதி எதையும் நியூயார்க்கிற்கு ஒதுக்க மாட்டேன் என்று கூட டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் காலங்களில் டிரம்பிற்கும் நியூயார்க் மேயரான மம்தானிக்கும் இடையே மோதல் போக்கே இருக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications