"டிரம்பின் ஈகோ.. இந்தியாவை இழப்பது அமெரிக்காவுக்கே நஷ்டம்!" வெளிப்படையாகவே எச்சரித்த அமெரிக்க எம்பி
வாஷிங்டன்: இந்தியா மீது டிரம்ப் விதித்த வரிகள் இரு நாட்டு உறவைக் கடுமையாகப் பாதிப்பதாக இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்க எம்பி ஒருவரே டிரம்ப்பின் நடவடிக்கைகளைச் சாடியிருக்கிறார். டிரம்ப் வரி இந்தியா உடனான உறவுக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், டிரம்ப்பின் ஈகோவிற்காக இந்தியாவை இழக்க முடியாது எனச் சாடியுள்ளார்.
இந்தியா மீது டிரம்ப் 50% வரியை விதித்திருந்தார். ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்குவதால் வரியை விதிப்பதாக அவர் அறிவித்தார். இது இரு நாட்டு உறவுகளை மிகக் கடுமையாகப் பாதிப்பதாக இருந்தது. இதனால் இரு நாட்டு வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதற்கிடையே அமெரிக்க எம்பி ஒருவரே டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க எம்பி
பல ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்தியா அமெரிக்கா உறவு அதிபர் டொனால்ட் டிரம்பின் அலட்சியமான வெளியுறவுக் கொள்கை காரணமாக இப்போது ஆபத்தில் இருப்பதாக அமெரிக்க எம்பி சிட்னி கம்லாகர்-டோவ் கூறியிருக்கிறார். டிரம்பின் அலட்சியம் அமெரிக்கா இந்தியா உறவை காலி செய்வதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு டிரம்பின் குடியரசு கட்சியினர் மவுனமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா அமெரிக்கா உறவு
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளியுறவுக் குழுவின் உறுப்பினரான கம்லாகர்-டோவ் மேலும் பேசுகையில், "ட்ரம்ப் தனது போக்கை திருத்திக் கொள்ள வேண்டும். டிரம்பின் அலட்சியமான வெளியுறவுக் கொள்கை பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக இருந்த அமெரிக்கா- இந்தியா உறவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. குடியரசுக் கட்சியினர் இதைப் பார்த்தும் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள். இந்தியா அமெரிக்கா உறவு முக்கியமானது. டிரம்பின் ஈகோவுக்காக அதைப் பலியிட முடியாது" என்றார்.
மேலும், முன்னாள் அதிபர் ஜோ பைடனின் சாதனையைப் பாராட்டிய கம்லாகர்-டோவ், "பாதுகாப்பு, முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் குவாட் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்திய பைடன், இரு நாடுகள் இடையேயான உறவை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றார். ஆனால், ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி போடுகிறேன் எனத் தடாலடியாக அறிவித்து பைடன் வளர்த்த உறவை சீர்குலைத்தார்.
டிரம்ப் ஈகோ
டிரம்பின் அலட்சியமான வெளியுறவுக் கொள்கை பல ஆண்டு உறவைச் சீர்குலைத்தது. அவரது ஈகோ தூண்டப்பட்டதால் மட்டுமே இந்தியாவுக்கு திடீரென 50 சதவீத வரியை விதித்தார். டிரம்ப் செய்த தவறை அவரது குடியரசு கட்சியினர் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எதுவுமே சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்கள். டிரம்ப் டீமுக்கு கட்டுப்பட்டவர்களாக மாறிவிட்டனர்.
இப்போது நிலைமையைச் சமாளிக்க ஒரே வழிதான் இருக்கிறது. சர்வதேச போட்டியை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா- இந்தியா ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. இதனால் சீக்கிரம் இந்தியா உடன் ஒரு ஒப்பந்தம் போட்டுப் பாதிப்பை சரிசெய்ய வேண்டும். இந்த நாட்டிற்காகவும், இந்தியாவுடனான நமது உறவை மேம்படுத்தவும் டிரம்ப் வேகமாகச் செயல்பட வேண்டும்" என்றார்.
பின்னணி
இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயக கட்சியினர் டிரம்பின் வர்த்தக கொள்கைகள் குறித்து கவலை தெரிவித்து வருகிறார்கள். ஆசியாவில் சீனாவை கவுன்டர் செய்ய இந்தியாவைத் தான் அமெரிக்கா நம்பி வந்தது. அப்படியிருக்கும்போது டிரம்ப் திடீரென தடாலடியாக வரிகளை விதிப்பது இரு நாட்டு உறவைப் பாதிக்கும் என்றும் இது சீனாவை நோக்கி இந்தியாவைத் தள்ளும் என்றும் அங்குள்ள ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து கவலை தெரிவிக்கும் நிலையில், அதன் வெளிப்பாடாகவே கம்லாகர்-டோவ்வின் பேச்சு இருக்கிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications